ஆசைத்தம்பி 7 கீழே விழுந்தார். தூரத்திலே சென்றவர்கள் தீ வெளிச் சத்தைக் கண்டு ஓடி வந்தனர். வள்ளியம்மாளுக்கு உடனே செய்தி அனுப்பப் பட்டது. தலைவிரிகோலமாய் ஓடிவந்தாள்: ஆவலோடு காத்திருந்த குழந்தைகள் அழுதுகொண்டு அடுத்து ஓடி வந்தனர். வீட்டிலே கிடத்தப்பட்டார் நாடார். “டாக் டரைக் கூப்பிடுங்கள்! டாக்டரைக் கூப்பிடுங்கள்!” என்று வள்ளியம்மாள் அலறினாள்; கஷ்டத்தோடு கண் ணைத் திறந்த நாடார்-" வள்ளி ! டாக்டரை கூப்பிடவா? கிராமத்திலே டாக்டர் ஏது? ஆஸ்பத்திரி ஏது ? பைத் தியம் பேசாமல் இரு. என் வாழ்வு அவ்வளவுதான் என்று சொன்னதும், "ஐயோ! என் அடிவயிற்றிலே தீ வைக்கவா தீபாவளி வந்தது? உங்களுக்கு இந்த நிலை வரவா தீபாவளி வந்தது?"-என்று கூறி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் வள்ளியம்மாள். அவளைச் சுற்றி நான்கு குழந்தைகளும் அப்பா! அப்பா!' - என்று அழுது கொண்டே நின்றனர். - கு நாடார் தன் மூத்த மகனை பக்கத்திலே அழைத்து உட்காரவைத்து - “நடராஜா! இனி நான் பிழைக்க மாட்டேன் அப்படி சொல்லாதீர்கள் அப்பா!" இல்லை! இந்த கிராமத்திலே ஒரு டாக்டர் இருந்தால் நான் இறக்கவேண்டியதிருக்காது. என் கடைசி வேண்டு கோள். குடும்பத்தைக் கவனித்துக்கொள். அதோடு நடராஜா! உன் தம்பி சேகரை ஒரு டாக்டருக்கு ! இந்த கிராமத்திலே ஒரு ஆஸ்பத்திரி திறக்க ஏற்பாடு செய்... செய்வாயா?" என்று நாடார் கேட்டு நடராஜன் பதில் சொல்வதற்குள் நாடார் இறந்தார். நாடாரின் பரிதாப மரணத்தைக் கண்டு பாலைவனமே அழுத்து. எந்த
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/8
Appearance