ஆசைத்தம்பி .43 உம்! உன் இஷ்டப்படி செய், வீட்டுக்குப் பெரிய வன் நீதான்,' அதற்கப்புறம் வள்ளியம்மாள் அங்கு நிற்கவில்லை. நடராஜனும் ஒரு இடத்தில் நிற்கவில்லை. அங்கும் இங்கும் சுழன்று அடிக்கும் காற்றுதானே புயல்? நடராஜன் மனம் புயலைப்போல இருந்ததினாலோ, என்னவோ அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். இதுவரைக்கும் தாயின் மனம் புண்பட நடராஜன் எதுவுமே பேசியது கிடையாது. ஆனால் இன்று? சற்று கடுமையாகவே பேசி விட்டான். இதை நடராஜன் நினைத்துப் பார்த்தான் ; அவன் உடல் நடுங்கியது. அப்போது அங்கே சேகர் மனைவி லீலா வந்தாள் : நடராஜன் காலடியில் ஒரு சிறு பொட்டணத்தை வைத் தாள். சிந்தனா லோகத்தில் இருந்த நடராஜன் லீலாவைக் கண்டதும். சிரிப்பை வரவழைத்தான். என்ன என்ன லீலா ? " இப்படி அவன் வாய் உளறியது. அதற்குள் சிந் தனையில் இருந்து பூரண விடுதலை பெற்றான். லீலாவை அப்போதுதான் நன்கு பார்த்தான். அவள் தோற்றமே மாறியிருந்தது. "லீலா! இது என்ன காட்சி? என் காலடியில் என்ன பொட்டணம்?" ஆச்சரியமாகக் கேட்டான் நடராஜன், பொட்ட ணத்தைக் கையில் எடுத்தான்: அதில் பூராவும் தங்க நகைகள், லீலா 'மூளியாக இருப்பதின் காரணத்தைத் தெரிந்துகொண்டான். 6 லீலா ஏன் நகைகளை எல்லாம் கழற்றிவிட்டாய்?"
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/44
Appearance