$2 தந்தையின் ஆணை சேகர் அதிர்ஷ்ட வசமாக தப்பினான் என்று தான் சொல்ல வேண்டும். பத்திரமாக திருமங்கலம் வந்து சேர்ந்தான். ஸ்டேஷ னுக்கு வெளியே நடந்தான்.
- நளினா வீடு எங்கே?
.. “ விசாரிக்கலாமா?" வேண்டாம்! வேண்டாம் ! பிச்சைக்காரத் தோற் றத்தில் இருந்து கொண்டு... பிரபுத்வ நளினாவை விசாரிக்க வேண்டாம்! .. அப்புறம் வேறு வழி! ஆம்! ஒன்றுமில்லை ! விசாரிக்கவேண்டியதுதான். இந்த மனப் போராட்டத்திற்கு பின் நளினா வீட்டை சேகர் கண்டுபிடித்து விட்டான். ஆனால்-- " உள்ளே போகவா?' "போவதற்குத்தானே வீட்டை கண்டுபிடித்தோம்." “வேறு யாராவது உள்ளே இருந்தால்...?" கள்ளமுள்ளவனுக்கல்லவா அந்த பயம்? உண்மைதான்! நளினா என் சிநேகிதை செல்லத் தான் வேண்டும். " முன் பின் யோசியாதபடி மட மடவென்று உள்ளே நுழைந்தான் சேகர். . ஏ! ஏ ! யார் நீ ? பிச்சைக்காரன் மாதிரி இருக்க திறந்த வீட்டில் நாய் மாதிரி..." இந்தப் பேச்சை சேகர் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது? துடுக்குத்தனமான வேலைக்காரி அப்படி பேசிவிட்டாள். அங்கே என்ன சப்தம் ?"