உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிந்து 15 கிடக்கிறது. ‘பொழுதுபோக்கு' முறை யிலே பேசப்படும் பேச்சுக்களைக் கேட்டிட ஏன் ஆயிர மாயிரம் மக்கள் கூடுகின்றனர்? கூடும் மக்களின் எண்ணமும் எதிர்கால வாழ்வும் பாதையும் ஏற்றமும் பெரும் முன்னேற்றமும் அடைந் திட வழி வகுத்திடும் பேச்சுகளாகவே அமைகின்றனவே! அந்தப்பேச்சுகள்! அதைக்கண்டு ஆளவந்தார்கள் சீறிடும் அளவுக்கு அந்தப் பேச்சுகளிலே சிந்தனைச் செறிவு- அரசியலார் அகராதிப்படி புரட்சி முரசு கொட்டப் படுகிறதே! நினைத்துப்பார்க்க வேண்டும், காமராஜர், பொழுதுபோக்கு என்றாலும், பொதுவாழ்வு, புனித வாழ்வாகத்தான் பயன்படுகிறது, பயன்படுத்தபடுகிறது. எங்களால், எங்கள் இயக்கத்தவரால், இயக்கத்தால் இயக் கத்தின் இலட்சியத்தால், என்பதை ! ஆம்! பொழுது போக்கும் நேரத்தை, கிடைத்த ஓய்வு நேரத்தை, உழைத்து நைந்து அலுத்துப்போய், உட்கார்ந்து ஆயாசத்தை, அயர்வை, அலுப்பை போக்கிக் கொள்ள வேண்டிய நேரத்தை. ஊருக்கு உழைத்திடும் நேரமாக உறங்கிடும் மக்களைத் தட்டியெழுப்பிடப் பயன் படுத்துகிறோம் நாங்கள் ! எங்கள் இயக்கம்-கட்சி ஏழை இயக்கம் பணம் ஏதும் இல்லாத கட்சி ! எங்களிடையே பிர்லாக்கள், டாடாக்கள், டால்மியாக்கள் கிடையாது. நாங்கள் ஏழைகள்தான். நாங்கள் எங்கள் உழைப்பால் வாழ்வோர், உயிர் வாழ்வோர், உயர்வோர் மட்டுமல்ல, பிறரையும் வாழ்விக்கும் எண்ணமும் எழுச்சியும் உயர்த் தும் உள்ள உணர்வும் உறுதியும் படைத்தவர்கள் ! என்பதால்தான் எங்களுக்குக் கிடைக்கும் ஓய்வையுங் கூட பொதுவாழ்வில் ஈடுபட்டு உழைப்பதிலேயே செல விடுகிறோம்.