19 எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கங்கேயே தங்கிடும் நிலையற்ற வாழ்வு வாழ்ந்து வந்ததில் நாளாக நாளாக மாறத்தொடங்கியது! மனிதன் மாறத் தொடங்கினான் சிந்திக்கத் தொடங்கிய காரணத்தால் ! மனிதன் இயற்கையின் வளப்பைக் கண்டு மகிழ்ந் தான், ஆரம்ப காலத்தில்! ஆரம்ப மனிதன் இயற்கை வனப்பைக் கண்டு மகிழ்ந்த அதே நேரத்தில். இயற்கை யின் சக்தியைக் கண்டு மருண்டான், மனக்கிலி கொண்டான்! மகிழ்ந்தான்-மருண்டான் கொண்டான் மனிதன். ஆரம்ப கால மனித வாழ்வு அப் படித்தானே இருந்தது? மனக்கிலி வளமான காய்களையும் கனிகளையும், கிழங்குகளை யும், அருமையான சோலைகளையும், தெள்ளிய நீரையும் கண்டு உண்டு களித்தபோது. இயற்கையின் வளத்தை யும் வனப்பையும் எண்ணி மனிதன் மகிழ்ந்தான் ! அதே நேரத்தில், முட்புதர்களையும், கரை புரண்டோடும் காட்டாறுகளையும், கடக்க முடியாத மலைகளையும், மடுக்களையும், அடர்ந்து நுழைய முடியாது வளர்ந் துள்ள காடுகளையும், அதிலே பற்றி யெரியும் தீச்சுடரை யும், வீசும் காற்றை-அடிக்கும் புயலை, அலைமோதும் கடலைக் கண்ட போதெல்லாம் மனிதன் மருளாது, மனக் கிலி கொள்ளாது இருக்க முடியவில்லை ! இந்த இரு நிலைகளிலும் மனிதன் சிக்கித் தவித்த நேரத்திலே காட்டுவிலங்குகளுடன் வேறு போட்டி போட்டுத் தன்னைத்தான் பாதுக்காத்துகொள்ள வேண் டிய கட்டாயத்திற்கும் ஆளாக வேண்டியிருந்தது, ஆரம்ப மனித வாழ்வு! இப்படிப் பட்ட நிலையற்ற காட்டு வாழ்வு நடத்திய மனித இனம், பகுத்தறிவு படைத்த மனித இனம், படிப்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/19
Appearance