24 முக்கிய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்திடும் மக்களைக் கொண்டதே எங்கள் இயக்கம். எங்கள் இயக்கம் ஒரு நடமாடுங் கல்லூரி - நல்லறி வுக் கல்லூரி என்பதை மீண்டும் குறிப்பிடுகிறேன். நட மாடுங் கல்லூரியின்-நல்லறிவுக் கல்லூரியின் நடமாட் டம்- போதனைகள் எங்கெங்கும் எப்படியெப்படி யெல்லாம் நடக்கவேண்டும் என்பதைக் கவனித்துப் பார்த்து அங்கெல்லாம் நடமாடுங் கல்லூரி நடமாடி- நாட்டினரின் நல்வாழ்வுக்கான நல்லறிவை யூட்டி, மக்களை மக்களாக வாழ்விக்கும் பெரும் பணியில் ஈடு பட்டாகவேண்டும். நடமாடுங் கல்லூரியின் முன்நிற்கும் வேலைகள் மகத்தானவை! குறிப்பாகத் தமிழ்நாட்டில்-திருநாட் டில்- திராவிட நாட்டில் மனிதவாழ்வின் எல்லாத்துறை களிலும் நடமாடுங் கல்லூரி- நல்லறிவுக் கல்லூரி முழு அளவில் முனைந்து வேலை செய்தாக வேண்டியிருக் கிறது. அப்போதுதான் தமிழரது வாழ்வு தன்னம்பிக்கை கொண்ட தன்மான வாழ்வாக விளங்கும், விளங்க முடி யும்- விளங்க வைக்கவும் முடியும், என்பது திண்ணம். நடமாடும் கல்லூரி-நல்லறிவுக் கல்லூரி பணி புரிய வேண்டிய துறைகள், தமிழரது வாழ்விலே மிக மிக அதிகம். தமிழன் இன்று கண்டதையெல்லாம் கடவுளாக மதித்துக் கண்மூடித்தொழுது வருகிறான். ஒரு கடவுளல்ல, பலபல கடவுள்களைக் கொண்டு பலபல கோயில்கள், அதற்கான திருவிழாக்கள், கும்பா
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/24
Appearance