உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 திராவிடச் சிங்கமே! பூனையைப் போலப் பதுங் காதே! புலியைப்போலச் சீறிவா! சுண்டெலியைப் போல வளைக்குள் நுழையாதே ! சிறுத்தையைப் போல பாய்ந்துவா! அச்சம் கொண்ட கோழையைப் போல பின் வாங்காதே! வீரம் நிறைந்த ஏறு போல முன்னுக்கு வா! உன் முன்னோர்களின் சரித்திரத்தில் மலிந்துள்ள வீரச் செயல்களுக்கு நீ ஒரு எடுத்துக் காட்டாக இரு ! அஞ்சாத நெஞ்சத்தோடு ஆற்றல் நிறைந்த உடலோடு வா ! எங்கே ? அண்ணா காட்டும் அறப்போருக்கு ! அண்ணா காட்டும் அறப்போரில் 'நான் பிறந்தநாடு எனதே-என் இனமே இந் நாட்டை ஆளுதல் வேண் டும், என்ற வீர ஒலி துடிதுடிக்கும் உன் துடிப்புள்ள இத யத்திலிருந்து வெற்றிக் கீதமாக வெளிவரும் காலத்தில், உன்னை நோக்கி தடியடிகள் தாராளமாகப் பாய்ந்து வர லாம்- வரும்-உன் விரிந்த மார்பைத் தயக்காமல் காட்டு ! 66 என் துப்பாக்கிக் குழாயிலிருந்து ரவைகள் பறந்து வர லாம்-வரும்—உன் பரந்த மார்பை அஞ்சாமல் காட்டு ! தூக்கு மேடையில் உன்னுயிரைக் குடிக்க தூக்குக் கயிறு ஆனந்தத்தோடு ஊஞ்சலாடலாம்-ஆடும்- பரி காசச் சிரிப்பை அதற்குப் பரிசளித்து விட்டு!, தாயகத்திற்கு நான் கொடுக்கும் பரிசு என்று பல மான குரலில் குரலில் கூவு! சிறையிலே தள்ளுவார்கள் - தலை முடிதான் சிரைக்கப்படும்! மனம் வருந்தாதே-மனம் விட்டுச் சிரி ! உன்னை ஈன்றெடுத்த தாயகத்தின் உரிமைக் காகக் குருதியை குடம் குடமாகக் கொட்டு ! குலை நடுங் காதே! குருதி குடித்துக் குடித்து உதடுகளிலே காய்ந்துப் போயிருக்கும் இரத்தக் கறையை சொர சொரப்பான