உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தான ஜாதிக் கொள்கைகள், மனித எண்ணத்திலிருந்தே விரட்டப்பட வேண்டும், களையப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வகுப்புத் துவேஷத்தைக் களைந் தெரியும் நற்பணியை, நல்லறிவுப் பிரச்சாரத்தை—அறி வுக் கருத்தை யூட்டிடும், அறிவுப் பணியைத் தடுத்திட நினைப்பதுதானே வகுப்புத் துவேஷமாகும்? உண்மையிலேயே இத்தகைய நற்பணிக்கு எதிரா கப்பேசுவோரும், எழுதுவோரும், செயலாற்றுவோருக் தான் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பவர்கள், அதனால் உண்மையிலேயே உருவான இலாபமும் அடைபவர்கள் என்பதை நன்றாக உணரவேண்டும், மக்கள். அறிவு பரவுகிறது. ஆராய்ச்சி மேலோங்குகிறது விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மக்களது எண்ணங்களும் மாறுகின்றன என்பதை மனதில் கொண்டு மேலும் மேலும் இத்தகைய நல்ல பணியைப் புரிந்திடும் நற்பணி யாளர்கட்குத் துணை புரியாவிடினும் தொல்லையாவது தராமல் இருக்கவேண்டும் ! கற்றோர்- தமது கல்வியின் பயனை, தாமும் பிறரும் உணரும் விதத்தில், காலத்திற்கும், விஞ்ஞானக் கருத் திற்கும் ஒப்ப நடந்து, தமது வாழ்வை நடத்தவேண் டும் - பிறரும் வாழ வகுக்கும் வாழ்வை, பிறரது வாழ்வை வளமற்றதாக மாற்றாத மாற்ற முடியாத நல்ல வாழ்வை, நாகரிக வாழ்வை வாழவேண்டும். மக்களிடத்திலே பழகும் நேரங்களில் எல்லாம், மக் களின் நல் வாழ்வில் நாட்டங் கொள்ளமாட்டார் அனை வரும், மக்களிடையே நல்லறிவுப் பிரச்சாரம் செய்தாக வேண்டும் என விரும்புகிறேன், வேண்டுகிறேன்.