உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 4 ஞர்களின் தலைமுறை ஒளிகுன்றி அகாலத்தில் வற்றிப் போய்க்கொண் டிருக்கிறது." அதுமட்டுமன்றி, அம்மதி வாணர் பிறிதோரிடத்தில் கூறுகிறார், “ கண்ட கண்ட இடங் களிலெல்லாம் செத்துப்போன கொள்கைகள்; செத்துப் போன இந்தக் கொள்கைகளைப் புதைக்காவிட்டால், இவை களின் துர்நாற்றத்தால் சமூகம் முழுவதும் அழுகிப் போய் விடும் என்று இவைகளைத் தான் நான் மேலே எடுத்துக் கூறினேன். சென்ற நூற்றாண்டிலேயே கூட, வடலூர் இரா மலிங்கர் "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண் டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" வேண்டுமென்று பாடியதையும் நீங்கள் அறிவீர்கள். - 99 "கலை - — மேல்நாட்டு அறிஞர்கள் பலர் கலையைப்பற்றித் தங்க ளுடைய அழகிய முடிபுகளைக் கூறியுள்ளனர். ஒழுக்கத்திற்குத் துணை செய்யவே " ("Art for the sake of Morality ) என்று ரஸ்கின் கூறினார். கலையிலே ஒழுக்கங் கெடுவதற்கு இடமிருக்கக் கூடாது என்ற கருத்தை வற்புறுத்தவே, இந்த முடிபினை அவர் தெரிவித்தார். மக் கள் வாழ்க்கையில் – ஒழுக்கம் இன்றியமையாதது. ஆகை யினாலே, ஒழுக்கத்திற்கு ஒவ்வாத கலைகள் கலைகள் போற்றப் படக் கூடாதவை என்ற கருத்தை - இங்கே காணலாம். இதை மறுத்ததுபோல "கலை கலைக்காகவே 'Art for Arts sake என்று, பிராட்லே என்பவர் கூறினார். அவ ருடைய நோக்கம், கலை ஒழுக்கத்திற்காகவே என்று கட்டுப் படுத்திவிட்டால், கலை, இயற்கையாய் வளர்வது குன்றுவ தோடன்றி, அது தன் உரிமையை இழக்க நேரிடுமே என்ப தாகும். நீதிக்கும், சமயத்துக்கும் கலை வேண்டாம், கலை கலைக்காகவே என்றார் அவர். ஆனால், கலை ஒழுக்கத்திற் காகவே இருக்கவேண்டும் என்பதை ஒப்பாவிட்டாலும், கலை ஒழுக்கத்தைக் கெடுப்பதாக இருக்கக்கூடாது என்பதை யாவரும் மறுக்கவில்லை. மக்கள் வாழ்க்கை கெடுவதற்குக் கலை காரணமானால், அது கலையின் உரிமை என்று எவரும் , வ