100 புரட்சியாளர் பெரியார் நாளிதழையும், 'ஆந்திர பிரகாசினி' என்னும் தெலுங்கு இதழை யும் தொடங்கி நடத்தி வந்தார்கள். தொடக்கத்தில் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களை, மாநாடுகளை நடத்தி, பொதுமக்களுடைய கண்களைத் திறந்தார்கள். சென்னை மாகாணத்தின் நாலா பக்கங் களிலும் முன்னர் காணாத விழிப்பும், எழுச்சியும் உண்டாயின. 'இல்லார்க்காக'ப் பாடுபடும் பொதுமக்கள் இயக்கம், அக்கால கட்டத்தில், நீதிக் கட்சி ஒன்றே. இரட்டை ஆட்சி முறை இந்தியாவில் எழுந்த விடுதலைத் கோரிக்கையை முழுமையாக ஒப்புக்கொள்ளும் பக்குவத்தில் அக்கால ஆங்கில ஆட்சி இல்லை. அதே நேரத்தில் அடியோடு மறுப்பதும் நல்லதல்ல என்று அன்னிய ஆட்சி உணர்ந்தது. எனவே, 'இரட்டை ஆட்சி முறை' என்னும் புதிய ஆட்சி முறை ஒன்றைக் கண்டுபிடித்து, 1919ஆம் ஆண் இந்திய அரசுச் சட்டத்தின்மூலம் செயல்படுத்தினார்கள். ண் இம் முறைப்படி ஆங்கில ஆளுநர், அவரால் நியமிக்கப்படும் நிர்வாக அவை உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சர்கள், ஆகியோர் கூட்டாக மாகாணங்களை ஆட்சி செய்யவேண்டும். அந்த ஆட்சிக் குழுவில், அமைச்சர்கள் சிறு பான்மையோராகவே இருப்பார்கள். மேலும் காவல், நிதி, நீதி, சட்டம் முதலிய துறைகளை அமைச்சர்களிடம் ஒப்படைக்காது நிர்வாக அவை உறுப்பினர்களிடமே ஒப்படைப்பார்கள். அமைச்சர் களிடம் கல்வி, மக்கள் உடல் நலம், உள்ளாட்சி, வேளாண்மை போன்ற துறைகள் இருக்கும். அதாவது, ஆட்சிக் குழு இரு பகுதி களைக் கொண்டது. சிறு பகுதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஆகியது. பெரும் பகுதி, ஆளுவோரால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆங்கில அரசுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள். ஆட்சி குழுவுக்கு அமைச்சர்களின் துறைகளை, நடவடிக்கைகளை கண் காணித்து கட்டுப்படுத்தவும் உரிமை இருந்தது. இப்படியிருந்த ஆட்சி முறைக்கே இரட்டை ஆட்சி முறை என்று பெயர். இரட்டை ஆட்சி முறையின்கீழ் 1920ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அப் பொதுத் தேர் தவில் நீதிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனவே, அக் கட்சித் தலைவராகிய திரு. பிட்டி தியாகராயச் செட்டி யாரை அமைச்சரவை அமைக்கும்படி அப்போதைய ஆளுநர் அழைத்தார். தியாகராயரோ பதவிப் பித்து இல்லாதவர். எனவே, தான் முதல் அமைச்சராக மறுத்துவிட்டார். எனவே,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/112
Appearance