பெண்ணுரிமைப் பணி 131 போல் கள்ளமின்றித் திரிந்து பறந்துவரும் பறவைகள். மல்லிகை மலர்போல சிரித்துக் களிப்பூட்டும் சிறார்கள். ஓர் உயிருக்கும் இன்னோருயிருக்கும் வேற்றுமை தெரியாத பிள்ளைகள். இவர்க ளுக்கு விளையாட்டே உலகம். குதித்துக் குதித்துச் செல்லும் சிட்டுக்குருவியைப் பார்த்துப் புன்னகை புரிவதே வேலை. திருமணம் என்பது, பெரியவர்கள், சிறுவனையும் சிறுமியையும் வைத்து விளையாட்டுக் காட்டுவது; பணத்திமிரைக் காட்டுவது. அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, பெண் பருவம் அடையும் வரையில் திருமணத்தைத் தள்ளிப்போடுவது அரிது. பெற்றோர் மடியில் தூங்கும் வயதுக் குழந்தைகளுக்கே திருமணம் செய்து வைத்து மகிழ்வார்கள். இந்த பொம்மை விளையாட்டு மூன்று நாட்க ளாவது நடக்கும். கடன்பட்டாகிலும் தடபுடலாக, பந்து மித்திரர்களுக்கு விருந்து வைத்து அனுப்பினால்தான் திருமணம்.' குழந்தை மணங்களை மிகப் பொறுப்போடு நடத்துவார்கள். சாதகப் பொருத்தம் பார்த்தே ஒப்புதல் அளிப்பார்கள். ஒருவருக்கு நால்வரிடம் சாதகங்களைக் காட்டி, அவர்கள் சரியென்று சொன்ன பிறகே முடிவுசெய்வார்கள். எத்தனை பொறுப்பான பெற்றோர்கள்! திருமண நாளை, நேரத்தை, வருவோர்க்கு வசதி பார்த்தா குறிப்பார்கள். இல்லை, நல்ல நாளாக, நல்லவேளை யாகப் பார்த்தே திருமணம் நடக்கும். திருமண மேடையில் கடவுளைச் சாட்சிக்கு அழைப்பார்கள். முன்னதாக, நீத்தார், குலதெய்வம். அப்போது புகழடிக்கும் தெய்வம், இத்தனைக்கும் வழிபாடு செய்துவிட்டே, பக்தியோடு திருமணத்தை நடத்திவைப் பார்கள். திருமணத்தில், 'தேவமொழி'யிலேயே மந்திரங்களைப் பொழிவார்கள். இத்தனைப் பாதுகாப்புகளோடு திருமணஞ் செய்தாலும் எத்தனை விதவைகள்! அறுபதில் எழுபதில் விதவை களானவர்களா? ஒரு வயதில், இரு வயதில் விதவைகளானவர்கள் எண்ணற்றோர். குழந்தை விதவைகள் குழந்தைகளைப் பிடித்திழுத்துத் திருமணம் என்ற ஒன்றை பல பேர் முன்னிலையில் நடத்திவிடுகிறார்கள். ஆண் குழந்தை இறந்து விட்டால் மனைவியாகிய பெண் குழந்தை விதவையாம். இக்கொடு மையின் பரப்பைக் காணுங்கள்: வயது 1-க்குள் 1 முதல் 2 வரை 2 முதல் 3 வரை விதவைகள் எண்ணிக்கை 497 494 1257
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/143
Appearance