உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி தந்தை பெரியார் அங்கே என்ன பேசினார்? "இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையைப் பெருமையாகக் கொண்டு எனக்கு அளித்திருந்தாலும் உண்மையைச் சொல்லுகிறேன்.. இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கக் கொஞ்சங்கூட என்மனம் இடந்தரவில்லை. இதுபோலத் தனிக் கிணறு வெட்டுவது ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்கள் அல்லர் என்று எண்ணிக் கொண்டு ஒரு நிரந்தரமான வேலியும், நினைவுக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். பட்சிகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் குடிப்பதில்லையா? அப்படிப்பட்ட தண்ணீரை இந்த ஆதிதிராவிடர் தோழர்கள் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்? அருமை ஆதிதிராவிடர் தோழர்களே! நீங்கள் உங்கள் ஜாதிக்கு இழிவு தேடிக் கொள்கிறீர்கள். எவரைக் கண்டாலும் இரு கை தூக்கி "சாமி" என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கிறது. அதை மாற்றிட வேண்டும். சுயமரியாதையில் கவலை இல்லாத ஜாதியாரை எவ்வளவுதான் உயர்த்தினாலும் உயராது என்று. தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே சுயமரியாதைத் தீயைக் கொளுத்தினார். எந்த நோக்கத்துக்காக அழைக்கப்பட்டாரோ, அந்த நோக்கம் தவறானது என்று தாம் சிந்தித்து உணர்ந்தபோது, தம்மை அழைத்துப் என்பதில் மயங்கிடாமல், உண்மையை வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசும் அறிவு நாணயம் என்பது தந்தை பெரியாருக்கே உரிய தனித்தன்மையாகும். பெருமைப்படுத்தினார்களே தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலே தன்மான உணர்வும், விடுதலை உணர்வும் உண்டாக்கப்படுவதற்கு இந்த நாட்டிலே