82 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி 68 'அடிதெரியும்படி" கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாய்க்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். இலக்கணம், சந்தி, புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி முதலியன நாய்க்கர் அவர்களைக் கண்டு நடுங்க வேண்டுமேயொழிய, அவைகளை லட்சியம் செய்பவர் நாய்க்கர் அல்ல. அவர் இயற்கையின் புதல்வன், மண்ணை மணந்த மணாளன். மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாய்க்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் போன்றது என்பதில் சந்தேகமில்லை. பொதுவான ஒரு மனது எல்லார் உள்ளங்களிலும் சரடுபோல் ஓடுகின்றது என்றார் எமர்ஸன் என்ற மேதாவி. இந்த "சரடு" தமிழ் மக்களின் உள்ளத்தில் உண்மையாக ஓடுமானால், ஒற்றுமைக் குறை ஏன் இருக்கவேண்டும், எவ்வாறு இருக்க முடியும் என்று ஒருவன் நினைப்பது சகஜந்தானே? லட்சியத்தில் ஒற்றுமையிருந்து, வாழ்க்கை முறையில் வித்தியாசமும் இல்லையானால், தமிழர்களின் சமுதாய வல்லமை ஒருக்காலும் சிந்திச் சிதறிப்போக முடியாது. நமது சமுதாய சக்தி ஒழுகிப்போகும் ஓட்டைகளை, நாய்க்கர் அவர்கள் ஆவலுடன் தேடினார். ஜாதிக் கொடுமை, மூடபக்தி, தீண்டாமை, வலியார் மெலியாரை வருத்தும் அசட்டுத்தனமான பரம்பரை அவலட்சணம், மனச்சாட்சியை ரப்பரைப்போல் அமைத்துக் கொள்ளும் சாமர்த்தியம், எதற்கும் சமாதானம் சொல்லும் விசித்திர ஜாலவித்தை, பெண்களின் முன்னேயும் பின்னேயும் பக்கத்திலும் படுதா, கிளிப்பிள்ளை வேதாந்தம், திண்ணை தத்துவம், போலிமதம், பிடுங்கல் புரோகிதம் இவையும் இவை போன்றவை யாவும் ஓட்டைகள் என்று நாயக்கர் கண்டார். சர்க்கார் பேரில் நாயக்கருக்கு இருந்த கோபம், இவைகளின் பேரில் பாய்ந்தது. யோசித்து. யோசித்து கோழையாகும் கூட்டத்தை நாயக்கர் அவர்கள் சேர்ந்தவரேயல்ல. செய்ய வேண்டும் என்று தோன்றியதை, தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம்: காணப்படுவதுபோல், - தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. லாப நஷ்டக் கணக்குப்
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/89
Appearance