உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் ஜோதி/காதல் ஜோதி—நாடக உறுப்பினர்கள்

விக்கிமூலம் இலிருந்து

காதல்ஜோதி

நாடக உறுப்பினர்கள்

சந்திரசேகர ஐயர்


வைதீகர்—வயோதிகர்—குலப் பெருமையும்
குடும்ப கௌரவமும் கெடக்கூடாது
என்பதிலே அதிக அக்கறை
கொண்டவர்—கிராமவாசி.

பிச்சுமணி


சந்திரசேகரர் குமாரன்—அருள் குமார்
என்ற பெயருடன் சினிமா நடிகராக
இருக்கிறான்—குலப் பெருமை கெடக்கூடாது
என்ற எண்ணம் கொண்டவன்—நகரில் வாசம்.

சுகுணா


சந்திரசேகரர் மகள்—விதவை—நகரில்
டாக்டராக இருக்கிறாள். ஜாதிக்
கட்டுகள் அர்த்தமற்றவை என்ற
கருத்துடையவள். கொண்ட கருத்தை
உருட்டல் மிரட்டல் கண்டு மாற்றிவிடும்
போக்கு கிடையாது.

போக்கிரி பொன்னன்


கிராமவாசி—முரடன் சூதுவாது
தெரியாதவன் பிராமணபக்தி
கொண்டவன்...

தடித்தாண்டவராயன்


வாழ்ந்து கெட்டவன்—பழங்காலக்
கருத்துடையவன்.

பபூன் பக்கிரி


தாண்டவராயன் மகன்—கூத்தாடிக்
காலந்தள்ளுபவன்—மெள்ள மெள்ளச்
சீர்திருத்தக் கருத்துகளை அறிந்து
கொண்டவன்.

பொன்னி


தாண்டவராயன் மகள்—விதவை—
உலகமறியாதவள்.

சாது சம்பந்தன்


பாடுபட்டுப் பிழைக்கும் விவசாயி—சாது

தங்கவேலன்


சம்பந்தம் மகன்—பட்டாளத்தில் பணி
புரிபவன்.

சின்னான்


போக்கிரி பொன்னனுக்குக் கையாள்.

அம்பிகா


அருள் குமாருடன் நடிக்கும் சினிமா
நட்சத்திரம்.

பொற்கொடி


நடனமாது.

அற்புதம்


மற்றோர் நடனமாது.

வேலன்


ஒரு பண்ணையாள்

மற்றும் பட முதலாளி, டைரக்டர்,
கதாசிரியர், பிரமுகர்கள், மார்வாடி
ஆகியோர்.

நிகழ்ச்சிகள் அழகூர் நகரிலும்,
ஆண்டாளூர், அபிஷேகபுரம் எனும்
கிராமங்களிலும் நடைபெறுவன.