உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

எனும் குறள் வழி நடக்கத் தெரிந்தவர்கள்—எனவே எந்தக் கழகமும் இல்லாதது கூறி எம்மை ஏய்த்திட முடியாது! உண்மையை நாங்கள் தெரிந்துகொண்டோம்.

உமது ஆட்சி எமக்குத் திருப்தி தரவில்லை.

ஊழல், நாற்றமடிக்கிறது.

உழைப்பாளிக்கு உரிமை மறுக்கப்படுகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வக்கும் உமக்கு இல்லை.

அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறீர்கள்.

வரிமேல் வரி போட்டு வாட்டி வதைக்கிறீர்கள்.

வடநாட்டிலே அதிகாரத்தைக் குவித்திருக்கிறார்கள்.

எதற்கும் காவடி தூக்கிக்கொண்டு டில்லி போகிறீர்கள்.

வளமும் செல்வமும் வடநாட்டில் பெருகிக் கிடக்கிறது.

தென்னகம், தொழில் வளர்ச்சியற்றுத் தேய்கிறது.

புதிய புதிய தொழில் திட்டம் தீட்டும் உரிமை சென்னையிடம் இல்லை,—டில்லியின் கரத்தில் இருக்கிறது.

அணையும் தேக்கமும் அங்கு, பிரம்மாண்டமான அளவு.

இங்கு பாசனத்துக்காகச் சிறு அணைகள்—அதற்கும் மக்களிடம் அதிகாரப் ‘பிச்சை’ எடுத்தீர்கள்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், தென்னகத்துக்குச் செய்யப்பட்ட அநீதியை, ‘தேசீய’ ஏடுகளே காட்டின—கட்டுரை, கவிதை, படம், போட்டு; நீங்களேகூடச் சில நேரங்களில் கண்ணைக் கசக்கிக்கொண்டும் கையைப் பிசைந்து கொண்டும், சொல்லியிருக்கிறீர்கள்!

தமிழகத்தின் உரிமையைக்கூடக் காப்பாற்றும் ஆற்றல் உமக்கு இல்லை; தேவிகுளம் பீர்மேடு இழந்தீர்கள்.

உம்முடைய வார்த்தைக்கு டில்லி மதிப்பளிக்கவில்லை; மானம் பெரிது என்று கருதி பதவியைத் துறக்கப் போவதாக ‘பாவனை’க்குச் சொல்வதற்கும் பயந்தீர்கள்!

ஒரு முதியவர், சாவது தெரிந்தும், ஈவு இரக்கமற்று இருந்தீர்கள்.

தமிழ்நாடு என்று பெயரிடும் அளவுக்கும் உமக்குத் தன்மான உணர்ச்சி இல்லை!

ஆகவே அமைச்சர்களே! அண்ணாத்துரை கிடக்கிறான், அற்பன், அவனுக்கு அரசியல் என்ன தெரியும், சினிமா