சொர்க்கவாசல், 1954 பதிப்பு
திலகா
என் அண்ணா தங்கக் குன்று – என்
வாழ்வு இன்பமயமாக வேண்டும்
என்பதுதான் அவர் இலட்சியம்.
திருமணம் நடைபெறும். அந்தத்
திருநாளும் விரைவிலே வரும் -
என்றுதான் நான் நம்பிக் கொண்டிருந்தேன்
மகிழ்சியுடன். பூந்தோட்டத்திலே ஆடிப்பாடி
இருந்து வந்தேன், ஆனால்...
குமாரதேவி
அமைச்சரே! படைத்தலைவரே! வீண் வாதங்கள்
வேண்டாம் மிரட்டலுக்கு, அஞ்சுபவளல்ல நான்.
அதேபோல மிரட்டி உங்களைப் பணிய
வைக்கவும் விரும்பமாட்டேன் திருமணம்
என் சொந்த விஷயம். என் வாழ்க்கைக்கு
ஒளி தேடும் உரிமை எனக்கு உண்டு.
இதிலே குறுக்கிடும் அதிகாரம் உங்களில்
யாருக்கும் கிடையாது.
பரிமளம் பிக்சர்ஸ்
சொர்க்கவாசல்
- கதை, வசனம்..அறிஞர் அண்ணா
(முழு வசனமும், பாடல்களும் அடங்கிய விரிவான வெளியீடு)
பகுத்தறிவுப் பாசறை,
பவழக்காரத் தெரு, – சென்னை-1.
மே 1954.
நாடக உறுப்பினர்கள்
மதிவாணன் | மக்கள் கவிஞன் |
முத்துமாணிக்கம் | மதிவாணனின் நண்பன் |
வெற்றி வேலன் | வேழநாட்டு அரசன் |
அருமறையானந்தர் | மடாதிபதி |
மாசிலாமணி | மடாதிபதியின் சீடன் |
சுந்தரமூர்த்தி கவிராயர் | மதிவாணனின் நண்பன் |
சோமநாதன் | முத்துமாணிக்கத்தின் தந்தை |
திலகா | மதிவாணனின் தங்கை |
குமாரதேவி | சோலை நாட்டரசி |
மரகதம் | வெற்றி வேலனின் மகள் |
கற்பகத்தம்மை | திலகாவின் தாய் |
அறிஞர் அண்ணா, மு. கருணாநிதி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி, சி. பி. சிற்றரசு,
அரங்கண்ணல், தில்லை வில்லாளன், இராதாமணாளன், மா. இளஞ்செழியன்,
மு. வரதராசனார் முதலிய பல அறிஞர்களின் இயக்கப் புத்தகங்களும்
இலக்கிய புத்தகங்களும் கிடைக்கும்.
பகுத்தறிவுப் பாசறை, பவழக்காரத் தெரு, சென்னை 1.
விலை அணா 8.
உரிமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உள்ளடக்கம்