127
எனினும், போர்முறை குறித்தே ஆய்வுரை பல கூறியுள்ளார்.
இருக்கட்டும் அண்ணா! இப்போது எதற்காகப் போர்முறை பற்றிப் பேசுகிறாய்—நாம் நடாத்தி வருவதோ அறப்போர் - நம்மை எதிர்ப்போர் நடத்திடுவதோ அக்கப் போர்—நீ கூறிடத் தொடங்கியதோ களம் நின்று போரிடும் முறை பற்றி; எதற்காக? என்று கேட்கின்றாய்! கேட்பது மட்டுமா தம்பி! அண்ணன்தான் பயந்தவன் ஆயிற்றே. பாரேன் போர் முறை பற்றி இத்தனை பேசிடும் வேடிக்கையை என்றெண்ணி உள்ளூரச் சிரித்திடவும் செய்கின்றாய்! அறியேனா!!
தம்பீ! இன்று எனக்குப் போர்—போர் முறை—படை—படை வகை—பயிற்சி—பயிற்சிக்கேற்ற படைவகை—என்பன பற்றிய எண்ணம் பிறந்தது. மலாசியாவைத் தாக்கிடச் சுகர்ணோ முனைகிறார் என்றோர் பக்கம் செய்தி! வியட்நாமில் அமளி —குழப்பம்—என்றோர் செய்தி! அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்காகத் துடித்திடும் கோல்ட்வாட்டர் என்பவர், பொதுவுடைமை நாடுகளுடன் போரிட்டாக வேண்டும் என்று வெறிப் பேச்சுக் கிளப்பிடும் செய்தி! இப்படிப் பல பார்த்ததால் எனக்கும் போர் பற்றிய எண்ணம் பிறந்தது போலும் என்று எண்ணிக் கொண்டிருப்பாய். என் எண்ணம் இந்தச் செய்திகளைக் கண்டதனால் எழுந்ததுமல்ல. வேறென்ன என்கிறாயோ! புதியதோர் படை புறப்படுகிறது-வாளேந்திப் போரிட அல்ல—புனிதப் போர் புரிய! அது பற்றிப் படித்தேன்—அருமையான ஓர் ஆய்வுரையும் இதுகுறித்து வெளிவந்திருந்தது. பார்ததேன்; பார்த்திடவே, போர் பற்றிய பொதுவான எண்ணம் எழுந்தது.
தம்பி; பெருமழையால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி எங்கும் சேறும் சகதியுமாகிவிட்டால், தவளைக் கூட்டத்துக்குக் கொண்டாட்டமல்லவா! கேட்போர் காதினைத் துளைத்திடத்தக்க கூச்சல் எழுப்பும், தூக்கத்தைக் கெடுக்கும்,
ஒரு குற்றமும் நாம் செய்தோமில்லை, இந்தத் தவளைகள் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்திடத் துணிந்தனவே? எத்தனை பெரிய சத்தம்! ஓயாத கூச்சல்! காதைத் துளைத்திடும் சத்தம்! என்ன எண்ணிக் கொண்டன இந்தத் தவளைகள்! கூச்சலிடுவதிலே நம்மை மிஞ்சு-