ஓர் இரவு
85
ஜெகவீரனைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்து விட்டாள்.
சுசீலாவுக்குப் பூரா விஷயமும் தெரியாது. நான் ஏதோ பயங்கரமான ஆபத்திலே சிக்கிக் கொண்டிருக்கிறேன், என்பது மட்டுமே தெரியும்.
சேகர்!
[அவன் முன் மண்டியிட முயற்சிக்க, சேகர் தடுத்து விடுகிறான்.]
சேகர்! என்னை மன்னித்துவிடு! சுசீலா,தியாகியின் திருக்குமாரி, தன்னையும் தியாகம் செய்கிறாள், என் பொருட்டு.
சேகர் : (உருக்கமாக) தியாக சுபாவம் எனக்கும் உண்டு. பரிதாபம். சித்திரவதைக்கு ஆளானீர். என் சுகம் போனால் கவலை இல்லை. சுசீலா, என் இருதயத்தில் எப்போதும் இருப்பாள். அழாதீர் தேவரே! நான் சுசீலாவைத் தியாகம்செய்யத் தீர்மானித்து விட்டேன்.
சுசீலா எங்கே? அவளை நான் பார்த்துவிட்டுப் போக வேண்டும். நான் பொழுது விடிவதற்குள், ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறேன்.
[சேகரின் கைகளை எடுத்துத் தேவர் தம் கண்களில் ஒத்திக்கொண்டு, மாடியைக் காட்ட, சேகர் மாடிக்குச் செல்கிறான்.]
காட்சி - 35
இடம் :- தேவர் வீட்டு மாடி.
இருப்போர் : சுசீலா, ரத்னம்.
(பிறகு) சேகர், தேவர்.
[கட்டிலின்மீது சுசீலா உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் கவலையுடன். ரத்னம், அரைத் தூக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.]
சு : தூங்கிவிட்டானா ஒரு சமயம்?
ர : இருக்காதம்மா! நீ கவலையில் கவனிக்கவில்லை. எனக்குப் பேச்சுக்குரல் கேட்டதே.
சு : பாதகன் பேசிப் பேசி என் அப்பாவின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான்.
[காலடிச் சத்தம் கேட்கிறது]