180
அந்தந்தப் பத்திரிகை மேற்கொண்டிருக்கும் கொள்கைப் போக்கிற்கு ஏற்பத் தலைப்புகளிட்டும்-வெட்டி ஒட்டியும்-வெளியிட்டன. இது இயற்கை என்பது புரிவதால் எனக்கு எரிச்சல் எழவில்லை.
முதலமைச்சர் அளிக்கும் விளக்கம், சில இதழ்களில் முதலமைச்சரின் உறுதி என்ற தலைப்பிலும், வேறு சில இதழ்களில் முதலமைச்சரின் பிடிவாதம் என்ற தலைப்பிலும் வெளிவருவது காண்கிறோம் அல்லவா ? அது போல, அவரவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற தலைப்புகளுடன், என் பேச்சை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு இதழும், அடியோடு இருட்டடிப்புச் செய்துவிடவில்லை.
இந்தப் பேச்சினால் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலை காரணமாகத்தான் பத்திரிகை நிருபர்கள் மாநாடு நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
பத்திரிகை நிருபர்கள் மாநாடு என்றால், நாம் சொற்பொழிவு நடத்த நடத்த, நிருபர்கள் குறிப்பு எடுத்து, இதழ்களில் வெளியிடுவது என்பதல்ல. பல இதழ்களின் நிருபர்கள் வருகிறார்கள்; கேள்வி மீது கேள்வியாகத் தொடுத்தபடி இருக்கிறார்கள்; அவற்றினுக்கு நாம் அளிக்கும் பதில்களைக் குறித்துக்கொண்டு போய், தத்தமது இதழ்களில் எந்தப் பகுதி தமக்குத் தேவை என்று அவர்களுக்குத் தென்படுகிறதோ அவைகளை வெளியிடுகிறார்கள்.
அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில், எனக்குத் துணையாகத் தோழர் செழியன் இருந்தார்; அவருடைய இல்லத்தில்தான் நடைபெற்றது மாநாடு.
முப்பது நிருபர்கள் இருக்கும் வந்திருந்தவர்கள்; ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே நடைபெற்றது.
இத்தகைய நிருபர்கள் மாநாட்டில், மடக்குவது, குறுக்கிடுவது போன்ற முறைகளில் தேர்ச்சி பெற்ற நிருபர்களிடம், மிகத் தெளிவாகவும், அதிகமான பர-