உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கடிதம்: 75

மிரட்டல்! விரட்டல்!

டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும்—டில்லியின் ஓரவஞ்சனை—கல்வி, கலை, அரசியலில்.

தம்பி!

தக்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா—கோபமில்லையே என்மீது அதற்காக!!

மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார்—அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல—ஆசிரியத் தொழிலில் இருப்பவர்—அமைதியில் ஆனந்தம் காண்பவர்—அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூடமாட்டார் — இவ்வளவு போதும் — கோடிட்டுக் காட்டினாலும் போதும்—இப்போதைக்கு இவ்வளவுபோதும்—என்று அவ்வப்போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர்—என் நண்பர்—தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர்—பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர். மு. வரதராசன்.

பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள்