சாம்பல்
16
ஏற்பட்டன—சமணம் போல, நிரீஸ்வரவாதமல்ல அவை — என்று பேசவும் தலைப்பட்டனர்.
இந்த ‘பாசம்’ இருந்த காலம்—பல்லவ சாம்ராஜ்யம் ஓங்கி வளர்ந்த சமயம். பல்லவ மன்னர்களும், சைவ—வைணவம் இரண்டையும் ஆதரித்து வந்தனர். மன்னரின் ஆதரவு பெற்றதால், இவ்விரு மார்க்கங்களும், மகோன்னத நிலை அடைந்தன. பெரும் பொருள் செலவிட்டுக் கலை நிபுணர்களை கொண்டு அழகான பலபெரிய கோயில்களை அமைத்து, மன்னர்கள் ‘பக்திமான்’கள்— ‘கலாவாணர்கள், என்ற விருதுகளுடன் புகழடைந்தனர். சமணம், ஆதரிப்பாரற்றுப் போயிற்று. இசையும் நடனமும், கூத்தும் கேளிக்கையும், பஜனைகளும் பல்வேறு விழாக்களும், சைவ வைணவச் செல்வாக்கை அதிகரிக்கச் செய்ததுடன், மக்களுக்குப் பெரியதோர் மனமயக்கத்தை ஊட்டின. இத்தகு முறைகளற்றதாலும் தத்துவங்களின் மீது கட்டப்பட்டதாலும், துறவு நிலையைப் பெரிதும் வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், சமணம், செல்வாக்கிழந்தது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற முறைக்கேற்றபடி, மன்னரின் ஆதரவைப் பெற்ற சைவ—வைணவத்தையே மக்களும் ஆதரித்தனர்.’
இந்த ‘வெற்றி’க்காக ஏற்பட்ட, சைவ—வைணவக் கூட்டுறவு, சமணம் இனித் தலைதூக்காது என்ற நிலை ஏற்பட்ட பிறகு, மீண்டும் போட்டியிடலாயின. இம்முறை நடந்த போட்டி, மக்களிடை, தத்தமது மதத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறியும், வேறு மதத்தின் சிறுமைகளை எடுத்துக் காட்டியும், நடத்தப்படும் பிரச்சாரமாக அமையவில்லை. பல நாட்கள் ‘அரியும்—அரனும் ஒன்றே’ என்று மக்களிடையே பேசியாகிவிட்டதால், மீண்டும், அரி—அரன் இருவரில், யார் உண்மைத் தெய்வம், சைவம்—வைணவம் இரண்டிலே எது சிறந்த மதம் என்ற போட்டிப்பிரச்சாரத்தை நடத்துவது முறையுமாகாது, பலனும் தராது என்பதை அறிந்த, அம் மதத்தலைவர்கள், மக்களிடம் சென்று பேசி, மண்டையை உடைக்கும் கலகத்தை மூட்டிவிடும் முறையைக் கைவிட்டு, அரண்மனையை முற்றுகையிடலாயினர்! மன்ன-