உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 ஒரு ஆட்சியா என்று கேட்டுத் துடிக்கின்றனர் முதியோர் கள்; நம்மை இத்தனை துச்சமாக எண்ணிவிட்டனரே என்றெண்ணி வேதனைப்படுகின்றனர் இளைஞர்கள்; அறம் அறிந்தவர்கள் பதறுகின்றனர்; சட்டம் தெரிந்தவர் கள் இதற்குப் போதுமான நியாயம் இல்லை என்று எடுத துரைக்கின்றனர்; கழகத் தோழர்கள் கலக்கமடைந்துள் ளனர்; முதலமைச்சர் மட்டும் நிற்கிறார் கற்பாறை போல! காலை மணி பத்து இருக்கும், நான் அங்குச் சென்ற போது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத், வழக்கறிஞர் இரத்தின வேலுபாண்டியன் மற்றும் பலரையும்தனியே இருக்கச் செய்துவிட்டு, என்னை மட்டும், சிறை அதிகாரிகள் மூவர், கருணாநிதி இருந்த சிறைக்கூடம் அழைத்துச் சென்றனர், சந்தித்துப் பேசுவதற்காக ஒரு அறை தயாரிக்கப்பட் டிருந்தது; இரு அதிகாரிகள் உடன் இருந்தனர். கருணாநிதி அழைத்துவரப்பட்டபோது, முன்பு பல முறை ஒருவரை ஒருவர் சிறையினில் சந்தித்ததுண்டு என்றபோதிலும், இம்முறை தனியானதோர் தவிப் புணர்ச்சி எழுந்து வாட்டியது. அதனை அடக்கிக் கொள்வது கடினம் என்றபோதிலும், கலக்கம் காட்டுவது நமது உள்ளத்தின் உறுதிபற்றி மற்றவர்களுக்கு அய்யப் பாடு ஏற்படுத்திவிடுமே என்ற அச்சம் துணை செய்தது; தவிப்புணர்ச்சியைத் தள்ளிவைத்துவிட்டு, அரைமணி நேரத்திற்குமேல் பேசிக்கொண்டிருந்தோம். முன்னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்துவிட்டேன்; விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனைப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்துவிட்டிருக்கிறார்கள் என்பது. நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி மூலம் மாறனிடம் பேசினேன் - கைது செய்யப்படக்கூடும் என்ற குறிகள் தென்பட்டிருந்தால்கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார். ஆகவே, நெல்லையில் நான் கேள்விப்பட்ட செய்தி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமைகள், இறுதியில் நமது கழகத்தைப் புடம்போட் டெடுத்த பொன்னாக ஆக்கிடும் என்ற பொது உண்மை தெரியும் - மிக நன்றாகத் தெரியும் என்ற போதிலும்-