உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அந்தத் தத்துவம் நடைமுறைக்கே வந்து விட்டதோ என்று சொல்லத்தக்க நிலைமைகள் உருவாகிக் கொண்டு வருகின்றன.

தம்பி! ஒன்று கூறுவர் காங்கிரசார், கூறுகின்றனர்; இந்தக்கிளர்ச்சிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றன—என்று.

எதிர்க் கட்சிகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; மக்கள் என்ன ஏமாளிகளா, அவர்கள் அறியார்களா, கிளர்ச்சியை ஒடுக்கத் தடியடி நடக்கும், துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதனை? தெரிந்தும் கிளர்ச்சியில் ஏன் ஈடுபடுகிறார்கள்?

அவர்கள் மனத்திலே கொந்தளிப்பு இருக்கிறது, ஆகவே கிளர்ச்சி செய்திடும் துணிவு தன்னாலே பிறக்கிறது.

எந்த எதிர்க்கட்சியும், தடியடிபட வருவீர்! துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக வருவீர் என்று மக்களை அழைத்துவர முடியாது. ஆனால், நடைபெறும் கிளர்ச்சிகள், ஆட்சியின் அலங்கோலத்தின் விளைவு என்பதை உணராதவர்கள் எதிர்க்கட்சிகள்மீது பழிபோடுகின்றனர்.

இதனை முட்டாள்தனம் என்று கண்டித்திருக்கிறார் ஒரு பேரறிவாளர்; இன்றைய ஆட்சியாளர்களும் போற்றித் தீரவேண்டிய பேரறிவாளர்.

இலட்சியங்களுக்காகவும் பொருளாதார நிலை காரணமாகவும், புரட்சிகள் ஏற்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள முட்டாள்தனமானவர்கள், தங்கள் எண்ணத்தோடு ஒட்டிவராத எதனையும் காண இயலாத கருத்துக் குருடர்கள் இந்தப் புரட்சிகளெல்லாம் கிளர்ச்சிகளால் விளைகின்றன என்று எண்ணிக் கொள்கிறார்கள். உள்ள நிலைமையில் திருப்தி ஏற்படாமல், மாறுதலை விரும்பி அதற்கான வேலை செய்பவர்களே கிளர்ச்சிக்காரர்கள்! ஆனால், ஆயிரம் ஆயிரம் மக்கள் ஒரு கிளர்ச்சிக்காரன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட மாட்டார்கள். பெரும்பாலான