உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

வீடு திரும்ப, முடிய மணி நாலு ஆகுதோ அஞ்சு ஆகுதோ, தெரியாது...

அப்ப, உன்னோட வீட்டுக்காரரும் அண்ணாவும் வந்ததும் கிளம்பப் போறயா...

ஆமாம்; அவரும் வருவாரேல்லோ...

ஆமாம், குடும்பத்தோட போனாத்தானே, பூஜை பலன் கொடுக்கும்...

நீ மட்டும் என்ன, நாங்களும்தான் வரப்போறோம்னு அவங்களும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கறாங்க. நான் மட்டும் பொறப்பட்டா, போய்விட்டுவான்னா சொல்வாங்க—

எல்லோருந்தான் கிளம்புவாங்க......நான், நீ பொறப்படறப்போ, வந்து பார்க்கறேன்; வழி அனுப்பி வைக்கறேன். உனக்குத்தான் தெரியுமே, நான் தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போற பழக்கத்தை நிறுத்திப் போட்டது.

பவுனாம்பாள் மெய்யம்மையுடன் பேசிவிட்டுச் சென்றான பிறகு, மெய்யம்மையின் கணவன் கருத்தப்பன் வீடு வர, நடந்த உரையாடலை மனைவி கூறுகிறாள்.

கருத்தப்பன் எதனையும் ஆராய்ந்து பார்த்திடும் இயல்பினன்.

தீ மிதிக்கும் திருவிழாவுக்குப் போகவேண்டும் என்று ஏன் பவுனாம்பாள் தூண்டிவிட முனைந்தாள் என்பது குறித்துச் சிந்திக்கலானான். மெய்யம்மையுடன் அது பற்றிப் பேசிடலானான்.

பவுனாம்பாளா சொன்னாங்கறே, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போய்வரச் சொல்லி......

ஆமா, அவதான், சொன்னா, திமிக்கிற திருவிழா வரட்டும், போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு பேசிக்கிட்டே இருக்கிறாயே, ஆட்சியூர் தடிஎடுத்தான் கோயில் திருவிழாவுக்குப் போகலியாண்ணு

அட, இது அதிசயமா இருக்குது, புள்ளே! பவுனாம்பா வாயாலே, தீமிதிக்கிற திருவிழா பத்திப் பெருமையாச் சொல்றது.... பவுனாம்பாவும் வருதா உன் கூட...