உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

களுக்கு முன்பே சஷ்டியப்த பூர்த்தி’யைக் கண்ட பேட்டையார் சே! சே! இது கூடவா தெரியவில்லை! மக்களுடைய கருத்தை அறியத்தான் பொதுத் தேர்தல் நடத்துகிறோம் என்று பேசுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்துகிறார்

நாடாளும் யோக்யதை எந்தக் கட்சிக்கும் இல்லை என்ற பேச்சு, ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்பது என் வாதம்.

அதனைப் புரிந்துகொள்ள விடவில்லை, பதவி! எதை எதையோ பேசவைக்கிறது. எது பேசினாலும் ‘ஜீரணமாகும்’—பதவி காரணமாக!!

சாதனைகளைக் கணக்கிட, மதிப்பிட, தேவையான சூழ்நிலை இல்லாதபோது, காங்கிரஸ் தன் சாதனைகளை படமாக்கினாலும் சரி, பாட்டு ஆக்கினாலும் சரி, அது பாதிக் கதையே தவிர, ‘முழுவதும்’ ஆகாது.

ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பைப் பெற மக்கள் இம்முறை முனைந்திருக்கிறார்கள் என்பது என் கருத்து.

மற்றோர் கட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நிலையிலும், இந்தச் சாதனைகளை மதிப்பிட, ஒரு வழி இருக்கிறது, என்ன அவ்வழி எனில், இவர்கள் அரசாண்டு வரும் இதே காலத்தில், பிற நாடுகளிலே அரசாள்பவர்கள் பெற்றுள்ள சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடலாம்.

அதற்கு அழைத்தாலோ, அவர்கள் அதெப்படி ஒப்பிடலாம்! வேறு நாடு! வேறு சூழ்நிலை! அந்த மக்களே வேறு! அவர்களுக்கு இருந்த சூழ்நிலையே வேறு! என்று பேசுகிறார்கள்; சிலர்; சில வேளைகளில்.

இவர்கள் குறிப்பிடுவனவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, இந்த நாட்டிலே இவர்கள் மூலமாகக் கிடைத்த சாதனைகளை மதிப்பிட்டவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள்? அவர்கள், ஆட்சியைப் பிடித்திட அலைபவர்கள் அல்ல! நாற்காலிப் பைத்தியம் பிடித்தவர்கள் அல்ல!!

மேற்கத்திய நாடுகளைக்கூட கணக்கில் எடுக்காமல் புதிதாக விடுதலைபெற்ற கிழக்கத்திய நாடுகளை