உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச் சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்ய வல்லவர், என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் ‘வீரன்’ சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் – ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை, ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற, தேவையான கருவியும் வேறுவேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர்புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒருகட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும்—போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, ‘தேசியமாக’ கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது – ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது – மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று.

பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. —சமையல் காரியம் முடிந்ததும். நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அது போலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட ‘படை’யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்கவேண்டும் —ஆனால், நடந்தது வேறு – விபரீதமானது – அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம்

அ. க. 7—9