4
பயன் படுத்தும்போது, எவ்விதமான அறிவு இப்போது மக்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து, அவ்விதமான அறிவு கிடைக்கும் விதமான கருத்துரைக்கும், காட்சி அமைப்புக்களும் கொண்ட நாடகங்களை நடத்தவேண்டும் என்று கூறுகின்றனர்.
மறுமலர்ச்சிக்கான முயற்சி துவக்கப்படு முன்பு வரை, நாடக மூலம், நாட்டவர் மனதிலே புகுத்தப்பட்ட கருத்துகள் பலதிறப்பட்டன என்ற போதிலும், அவைகளை எல்லாம் பிரித்துத் தொகுத்து, ஜலித்து எடுத்தால், மூன்று முக்கியமான கருத்துக்களையே தந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
அதாவது விதி; மேல் உலக வாழ்வு; குலத்துக்கோர் நீதி; மக்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும், சந்தோஷத்துக்கும் சஞ்சலத்துக்கும், பிறப்புக்கும், இறப்புக்கும், செல்வ வாழ்வுக்கும் வறுமையால் செல்லரித்துப் போன வாழ்வுக்கும், மாடமாளிகையில கூத்தாடும் களிப்புக்கும், குடிசையிலே கொட்டும் வாட்டத்துக்கும் எதற்கும் நாடகமேடை (கதை, காட்சி மூலம்) எடுத்துரைத்த காரணம் என்ன விதி: யாரை விட்டதுகாண்; விதிவசம், எவரை விட்டது காண்; பாடுவார் நடிகர் ராமச்சந்திரர், மர உரியைத் தரித்த வேடத்தில் சீதா பிராட்டியரிடம், எதிரே இருந்து காட்சியைப் பார்ப்பவன், மில்லிலே மார்புடையப் பாடுபட்டுவிட்டு, மாகாளி கோயில் குங்குமத்தை நெற்றியிலே அப்பிக் கொண்டுள்ள அரைவயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கும் ஆலைத் தொழிலாளி.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தும், கையே தலையணையாய், கட்டாந்தரையே படுக்கையாய், காய்ந்த வயிறே தோழனாய்க் கொண்டு கஷ்டப்படும் பாட்டாளி முன்பு, விறகு வெட்டி வேதனைப்பட்ட சத்தியவான், ராஜ்யமிழந்து சுடலை காத்த அரிச்சந்திரன், பெற்ற குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்ல தங்காள், இவர்களைக் காட்டி, எத்தகைய அறிவை வளர்க்க முடியும்! விதி—விதி என்று அவனை விம்ம வைக்கத்தானே முடியும்: இந்தத் தேள்கடிக்குப் பிறகு, ஒரு தேன் சொட்டு அவனுக்கு—அதாவது மேல் உலகக் காட்சி—அங்கு கற்பக விருட்சம், காமதேனு! இந்த ‘அறிவு’ அல்ல இன்று தேவைப்படுவது! அது போலவே, வெற்றி வீரனான மன்னன், குலகுரு முன் மண்டியிடும் காட்சி, நடத்திக் காட்டப்படும்; என்ன அதன் பொருள்?
பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, நாடக மேடை ராஜதர்பாரே ஜாதி முறை போதனை விளக்கமாகத்தான் இருக்கும்!
- ஆலயங்களிலே அந்தணர்கள் பூஜைகளைச் செய்து வருகிறார்களா?