உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பாரம்

27

பசுக்கு மகத்தான வரவேற்பளித்தது. தம்முடன் சரி சமமான ஆசனமளித்து, கொலம்பசைக் கௌரவித்தனர். பொன்னாடையை மேலே விரித்து, அதன் நிழலில் அவன் நடந்து வரும்படி செய்தனர். பல நாடுகளிலே அவனுடைய புகழ் பரவிற்று. அவனைப் பித்தனென்றும் எத்தனென்றும் கேலி பேசியும் கண்டித்தும் வந்தவர்கள், வெட்கினர். வெற்றிவீரனாக விளங்கினான் கொலம்பஸ்.

எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், ஏளனத்துக்கு ஆளானாலும், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். தூற்றினோரே துதிபாடி நிற்பர். ஏளனம் பேசினோர். ஏத்தி ஏத்தித் தொழுவர்! சந்தேகமிருப்பின், கொலம்பசின் இன்றைய நிலையைப் பார். மன்னர், அவனைத் தன் நண்பனென்று கூறி மகிழ்கிறார். ஸ்பானிஷ் மண்டலம் போற்றுகிறது. மானிலமே அவனைப் புகழ்கிறது—என்று பலரும் கூறினர்.

கொலம்பஸ், தன் திட்டம் வெற்றி பெற்றதற்குக் காரணம் வேந்தன் தன்னிடம் காட்டிய ஆதரவுதான், என்பதைக் கூறிக் கூறிப் பூரித்தான். ஒருவன் திறமைசாலியாக இருக்கலாம். அபூர்வமான ஆராய்ச்சியாளனாக இருக்கலாம் ஆனால், அவன் வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/30&oldid=1772208" இலிருந்து மீள்விக்கப்பட்டது