பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ύ வெள்ளை ஆட்டுக்குட்டி ஒயின் குடிக்கிருன்.” 'நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று அவனிடம் சொன்னுயா?’’

    • ஆமாம். ’’

'அவன் என்ன சொன்னன்?’’ சரிதான் என்ருன்.” நவசார்த் அவ் வார்த்தைகளைத் தனக்குள் திரும்பவும் சொன்னன். 'நல்லது. அப்படியாளுல் அவன் சீக்கிரம் வீடுவந்து சேர்வான் என்று அர்த்தம். நான் அடுப்பைப் பற்றவைக்கிறேன்.” விரைவில் அடுப்பில் தீ நன்கு பற்றி எரியும்படி செய்தான். அப்புறம், இறைச்சி சுடும் சாதனங்களைச் சுத்தப்படுத்தினன். வீட்டினுள் மறுபடி போனன். விளக்கிலிருந்த தூசியைத் துடைத்தான். காத்திருப்பதற்காக மேஜை முன் அமர்ந்தான். நேரம் முடிவில்லாமல் இழுபட்டது. கிராமத்தில் விளக்குகள் எரியலாயின. வீடுகள் இதமான தோற்றம் கொண்டன. தெரு ஒசைகள் அடங்கிக்கொண்டிருந்தன. பின்னர், தூரத்தில் நாய்கள் சோகமாய்க் குரைக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. அர்ஷாக் இன்னும் வரவில்லை. தீ அணைந்தது. அடுப்பில் ஒரு குவிய சாம்பலே எஞ்சியது. ஆட்டுக்குட்டி புல் மீது படுத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. நவசார்த் செவிகளைக் கூர்மை யாக்கி இருட்டுக்குள் கவனித்தான். அவன் கண்கள் வவித்தன; நீர் பெருக்கத் தொடங்கின. தலை கனத்தது. அவன் எழுந்தான். ஆளுல், கால்கள் நகர மறுத்தன. நான் ஏன் அவனிடம் பிச்சை கேட்கப் போகவேண்டும்? அவனைவிட நான் வயது முதிர்ந்தவன். அவன்தான் என்னிடம் வரவேண்டும்’ என்று அவன் குறைபடத் தொடங்கினன். ஆனால், பிறகு திரும்பவும் இப்படிச் சொல்லித் தன்னைத் தேற்றினன்: 'நல்லது. அவன் முக்கியமான மனிதன். ஒருவேளை சேர்மனேடு கலந்து பேசவேண்டிய முக்கிய வேலை ஏதேனும் அவனுக்கு இருக்கலாம். அவன் கட்டாயம் காலையில் வருவான்.’’ ஆளுலும்கூட, அவன் காத்திருந்தான். இரவில் வெகுநேரம் வரை காத்திருந்தான். இருட்டினுள் விடாது உற்றுப் பார்த்த தஞல் கிழவனின் கண்கள் மங்கிப்போயின. அவன் மெதுவாகத் தூக்கத்தின் வசப்பட்டான். நவசார்த் மேஜை முன் உட்கார்ந்த படியே தூக்கத்தில் ஆழ்ந்தான். எவ்வளவு நேரம் துரங்கினன் என்பதை அவன் அறியான். முற்றத்திலிருந்து கூப்பிட்ட அடுத்த வீட்டுக்காரியின் குரலால்