பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 அகத்திணைக் கொள்கைகள் உணர்ச்சியை நாணங் கடவாது காத்துக் கொள்வாள். குறுத் தொகைப் பிரிவுத் தலைவியொருத்தி, 'இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும், புலம்பும், இன்றுகொல் தோழியவர் சென்ற நாடே." இல் இறை-இல்லத்தின் சிறப்பு: பிள்ளை - குஞ்சுகள்: புலம்பும்-தனிமையும்; புண்கண்-துன்பம்) என்று தானே சொல்லி அமைதி பெறுகின்றதைக் காண்க. சுற்றுப்புறக் காட்சிகள் விடாது தாக்கினாலும், காமம் பெருகி நெஞ்சிற் பரவி அலைத்தாலும் தலைவி நாண் கடவாள் ஊரறிய உணர்ச்சியையும் காட்டாள். தானே ஆறுதல் அடைவாள்; அல்லது தோழியால் ஆற்றுவிக்கப் பெறுவாள். இது ஐத் திணை நெறி என் பதை நாம் அறிவோம் இந்நெறி வழுவிப் பிரிவுத் துன்பத்தால் தன்னை மறந்த நிலையில் ஊரறிய வெளிவந்து புலம்பும்பொழுது நாண் நீங்கி பெருந்தினை தோன்றுகின்றது. கலித்தொகைத் தலைவியொருத்தியின் மண வாழ்க்கையில் கணவனுடன் அகம் மகிழ, மனம் நெகிழக் கூடிக் குலவி மன நிறைவு பெறுவதற்கு முன்னர்ப் பிரிவு நிகழ்ந்து விடுகின்றது. புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை அருகுவித்து ஒருவரை அகன்றலின் தெரிவார்கண் பயனின்று மன்றம்ம காமம்’ என்று பாடலாசிரியரே இவள் இளம் பிரிவிற்கு இரங்குகின்றார். மணந்த சில காலத்திற்குள் பிரிவதாயின் காமத்திற்குப் பெருமை யில்லையே என்று நகுகின்றார். இத்தலைவியிடம் யாதொரு குற்றமும் இல்லை. குற்றம் செய்யும் நிலையிலும் இவள் வளர வில்லை. தோழியரோடு விளையாடும் காலத்தும் பல்லெலாம் தெரியக் காட்டிச் சிரித்தறியாள். பல்நுனியும் தோன்றா வண்ணம் முறுவலை உள்ளடக்கி, மனமகிழ்ச்சியைக் கண்ணாலும் முகத்தா லும் மெல்லிதாகக் காட்டும் நாண்மிகுதியுடையவள். இத்தகை யவளின் நெஞ்சென்னும் அடுப்பில் காமக்கொழுந்தைப் பிறப்பித்து SAASAASAASAASAAAS 31. குறுந். 46 32. கலி.142