பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

வேகமாக ஊர்ந்துது செல்ல மோட்டாரும். தூரத்தைக் குறைக்க உதவுகிற உலகின் சகல பாகங்களையும் பக்கத்திலே உள்ளன போல் எண்ணச் செய்கிற, குறைந்த நேர இன்பகரமான பயணத்திற்கு உரிய ஆகாய விமானங்களும் அங்குமிங்கும் பறந்து என்ன செய்ய? அவற்றால் உயிர்க்குலத்தின் பெரும்பாலோருக்கு ஓர் சிறிது பயனேனும் உண்டா?

ஆதலின், இவையெல்லாம் இப்பொழுது ஒரு சிலரின் - செல்வர்களின் - ஏகபோக உரிமையாக உள்ளன. எல்லோருக்கும் அவசியமானவைகள் சிறு கும்பலின் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுவது தான் அறிவுடைமையா? மக்கட்குலத்துக்குச் செய்யப்பெறும் வஞ்சகமில்லேயா?

இத்தகைய வஞ்சகங்களுக்கு சாவுமணி அடிக்க வேண்டியது அல்லவா சமுதாய சீர்திருத்தத்துக்கு உழைக்க முன் வருகின்ற உத்திமர்களின் முதல் வேலை?

உழைப்பு கெளரவிக்கப்படவேண்டும். உழைப்புக்கு உரிய மதிப்பு வேண்டும். உழைப்புக்குத் தகுந்த ஓய்வும் வசதிகளும் ஒவ்வொருவருக்கும் வேண்டும், ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

அதற்காக சுயநலத்துக்கும், சோம்பேறித்தனத்துக்கும், பணமூட்டைகளின் படாடோப மோகத்துக்கும்- பொதுவாக, உழைப்பவர்களின் வாழ்விற்கு ஊறுசெய்கின்ற அனைத்துக்கும் - சாவுமணி அடித்தாக வேண்டும், புதுயுகம் உதயமாக வேண்டுமானால்?