பக்கம்:அதிசயப் பெண்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

அதிசயப் பெண்

வேப்பிலையை மென்று விழுங்கும் காரியத்தில் ஈடுபட்டிருந்த ஒட்டகம் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தது. ஒரு சிறிய கரிய உருவம், “கா, கா” என்று தன்னை அழைப்பதைக் கண்டது. அதைக் கண்ணாலே காணுவதற்கு முன்பே அதன் ஒலி ஒட்டகதின் உள்ளத்தைப் பிணித்துவிட்டது.

இரண்டு பிராணிகளும் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டன. காக்கை, “அண்ணா, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!” என்று பேச ஆரம்பித்தது.

ஒட்டகம்:—உன்னுடைய குரல் அல்லவா என்னே மயக்கிவிட்டது!.

காக்கை:— பேசும்போது உன் உதடு அசங்கும் அழகு ஒன்றே போதுமே! கீழே மடிந்து தொங்கும் அதற்கு உபமானம் சொல்ல எந்தக் கவியாலும் முடியாது.

ஒட்டகம்:—உன்னுடைய கிருஷ்ண வர்ணத்தை, இந்த உலகத்தில் எங்கே காண முடியும்?

காக்கை:—உன் முதுகுதான் எவ்வளவு அழகு! படிப்படியாக வளைந்து வளைந்து ஒரு மலையிலே சிகரம் அமைந்தது போலத் திமிலோடு மகோன்னதமாகக் காட்சி அளிக்கிறதே!

இப்படி இரண்டும் தங்களுடைய அழகை வருணித்துக்கொண்டன.

நாம் இருவரும் இவ்வாறு அழகு மயமாக இருந்து தனித் தனியே உலாவுகிறோமே! நம் இருவருடைய அழகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/48&oldid=1482999" இலிருந்து மீள்விக்கப்பட்டது