மின்னனுக் குழல்களின் பணிகள் 41 வெவ்வேறு செயல்களைச் செய்யவேண்டியிருப்பதால், இவை யாவும் ஒன்ருேடொன்று கலவாமல் இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிதல் வேண்டும். வானெலிக் குழல்கள் தம்முள் புகும் மின்னேட்டத்தில் ஒரு சில மாற்றங்களைச்செய்து ஆயிரக்கணக்கான பணிகளைச் செய்கின்றன. அந்த மாற்றங்கள் யாவை என்பதைக் காண்போம். கட்டுப்படுத்துதல் : ஒரு கம்பியில் பாய்ந்து செல்லும் மின்னேட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமான காரியம். சில வேலைகளில் மின்னுேட்டத்தை நிமிட மொன்றுக்கு ஆயிரக்கணக்கான தடவைகள் நிறுத்தவும் படம் 22. ஒரு கம்பியிலுள்ள மின்னணுக்களைப் புறப்படச் செய்வதற்குத் தள்ளவும் வேண்டும்; இழுக்கவும் வேண்டும் ஒடவும் செய்யவேண்டியிருக்கும். இதைச் சாதாரணமாக ஒரு பொத்தானைக் கொண்டு (switch) செய்யமுடியாது. ஒரு கடத்தியிலுள்ள மின்னணுக்கள் தமக்கு யாதொரு தொல்லையும் இல்லாதிருக்கவே விரும்புகின்றன. தாம் ஒரு மின்குேட்டமாகப் பாய்ந்து செல்லாதிருக்கும்பொழுது தாம் புறப்படுவதற்கு விரும்புவதில்லை; அவற்றைப் பல மாகத் தள்ள வேண்டியுள்ளது. அவை பாய்ந்து சென்று கொண்டிருக்கும்பொழுது தம்மை நிறுத்துவதற்கும் அவை விரும்புவதில்லை. இதைப் படங்கள் 22, 23 விளக்குகின்றன.
பக்கம்:அதிசய மின்னணு.pdf/50
Appearance