பக்கம்:அதிசய மின்னணு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை மின்னனுக்கள் so கின்றது. இது கம்பி இழை (filament) என்று வழங்கப்பெறும். இது டங்க்ஸ்டன் என்ற ஒருவித பிரத்தியேகமான உலோகத்தாலானது, மின்னுேட்டம் இந்தக் கம்பியினுள் ஒடி அங்குள்ள மின்னணுக்களை வெளியே தள்ளி அசைந் தாடச் செய்கின்றன. அவை விரைவாக வெளியேறுங்கால் வெப்பக் கதிர்களையும் வீசுகின்றன. இரண்டு மரக்கட்டைத் துண்டுகளைத் தேய்த்து நெருப் பினை உண்டாக்குங்கால் இதே நிகழ்ச்சி நேரிடுகின்றது. இஃது உராய்வு (triction) எனப்படும். இரண்டுகட்டைகளைச் சேர்த்துத் தேய்க்குங்கால் கட்டையிலுள்ள மின்னணுக்கள் ஒன்ருேடொன்று ஊசலாடிக் கொஞ்சம் வெப்பக் கதிர்களை வீசுகின்றன; இக்கதிர்களே நெருப்பைத் தோற்றுவிக் கின்றன. விளக்குக்குமிழில் காற்று இல்லாமையாலும், காற்றின்றி ஒரு பொருள் எரியாதாகையாலும் இழையி லுள்ள மின்னணுக்கள் நெருப்பினை விளைவிப்பதில்லை. சூடான இழையிலுள்ள மின்னணுக்கள் எரியாவிடி னும், அவை அனுப்பும் கதிர்கள் வெண்ணிறமாக ஒளி விடச் செய்கின்றன. இதைத்தான் நாம் மின் ஒளி (electric light) என்கின்ருேம். மின் விளக்குக் குமிழ் வெற்றிடமாக இராவிடில், இழை எரிந்து போகும் , ஒளியும் இல்லாது போய்விடும். சில சமயம் மின் விளக்குக் குமிழ்களிலுள்ள மின்னணுக்கள் மிக வேகமாக அசைந்து இழையை விட்டு வெளியே தாண்டிக் குதிக்கும். அவை அங்ங்னம் செய்யும் பொழுது ஒளி விடுவதினின்றும் நின்றுபோகின்றன. குமிழின் உட்புறத்தில் கருமையான கறை படிகின்றது. ...to ஒரு வானொலிக் குழலில் எல்லாச் சிறிய மின்னனுக் குழல்களைப் போலவே மின்னணுக்கள் இழையை விட்டு வெளியேறுகின்றன என்று கருதப் பெற்றபோதிலும், விடு தலபெறும் வரையிலும் அவை வேலை செய்வதில் இறங்கு 2 است. نشاقع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/26&oldid=735112" இலிருந்து மீள்விக்கப்பட்டது