பக்கம்:அதிசய மின்னணு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுவியல் அறிவியல் ஆராய்ச்சித்துறையிலும் பெரும்பங்கு பெறுகின்றது. இதுகாறும் மக்கள் கண்டறிய முடியாத பல நுட்பமான தகவல்களையெல்லாம் திரட்டு வதற்கு இத்துறை பெரிதும் பயன்படுகின்றது. அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் காண்போம். பன்னெடு நாட்களாக துண் பெருக்கி (microscope) அறிவியலறிஞர்களின் துணைவகை இருந்து வருகின்றது. இக்கருவியினைக்கொண்டு தம் கண்களால் பார்க்க முடியாத வற்றையும் அவர்கள் கண்டுகொள்ள முடிந்தது; ஆராயவும் முடிந்தது. சில காலம்வரை நுண் பெருக்கிகள் மிகத் திறனுள்ளனவாக அமையவில்லை. நாளடைவில் அவை: நன்கு அமைக்கப்பெற்றன. இன்று நவீன உயர் ஆற்றல்நுண் பெருக்கியினைக் கொண்டு அறிவியலறிஞர்கள் இரண் டாயிரம் மடங்கு பொருள்களைப் பெருக்கிப் (magnity) பார்க்க முடிகின்றது. முதலில் நுண் பெருக்கி வேலை செய்யும் முறையை அறிந்து கொள்வோம். ஒர் ஆற்றல் வாய்ந்த ஒளியை ஒரு வில்லையினுள் செலுத்தி ஓர் உறைப்பான கற்றை ஆக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/94&oldid=735187" இலிருந்து மீள்விக்கப்பட்டது