44 அதிசய மின்னணு டத்தைக் கட்டுப் படுத்துவதும் எளிது; இதை நீண்ட தூரங் கட்கு அனுப்புவதில் செலவும் குறைவு. மேற்கூறிய இருதிசை மின்னேட்டம் ஒரு திசை மின் ைேட்டம் தேவைப்படும் ஒரு தொழிலகத்திற்கு வருவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதன் திசை ஒரே மாதிரி செல்லுவதற்கேற்ற ஒருமாற்றம் செய்வித்தல் வேண்டும். இந்தவகை மின்னுேட்டத்தைக் கொண்டுவரும் கம்பியில், ஒரு மின்னணுக் குழலை வைத்தால் அது மின் னுேட்டத்தை மாற்றி விடுகின்றது (rectifies). மின்னேட்டம் முன்னும் பின்னுமாகச் செல்லுவதை மாற்றி அதை ஒரே திசையில் அருவிபோல் செல்லும் ஒருதிசை மின்னேட்ட மாகக் குழல் மாற்றி விடுகின்றது. சில திருத்தும் குழல்களின் அமைப்பு எளிதானது. அவற்றில் கம்பிவலை இல்லை; அவை நேர்மின்-வாயையும் எதிர்-மின்வாயையும் மட்டிலுமே கொண்டிருக்கும். மின் னுேட்டம் முன்னுேக்கிப் பாயும்பொழுது அஃது எதிர்மின் வாயினின்றும் குழலின் குறுக்கே நேர் - மின்வாய்க்குப் பாய்கின்றது. ஒரு குழலிலுள்ள தனி மின்னணுக்கள் ஒரே திசையில் மட்டிலும்தான் செல்லக்கூடும். அவை எதிர்-மின்சாரத் தன்மையைப் பெற்றிருப்பதால், அவை நேர்-மின்சாரத் தன்மையையுடைய தட்டை நோக்கியே செல்லவேண்டும். தட்டினை எதிர்மின்சாரத் தன்மையுடையதாகச் செய்தால், எதிர் மின்னணுக்கள் தாம் இருந்த இடத்திலேயே தங்கி விடும்; ஆல்ை அவை தட்டிலிருந்து பின்ளுேக்கி எதிர்-மின் வாய்க்குச் செல்லா. ஆகவே, கம்பியிலுள்ள மின்னேட்டம் பின்னுேக்கிப் பாயும்பொழுது, குழலில் யாதொன்றும் நிகழ் வதில்லை. ஏற்கெனவே தட்டினையடைந்த மின்னணுக்கள் அங்கேயே தங்கி விடுகின்றன. சுற்றிலுள்ள மின்னணுக்கள்
பக்கம்:அதிசய மின்னணு.pdf/55
Appearance