இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மின்னணுக் காவலர்கள் 77. மிகச்சிறிய அசுத்தங்களையும் அறிந்துகொள்ள வல்லவை. எடுத்துக்காட்டாக, வாயு அல்லது வேதிப்பொருள்கள் (chemicals) தம்முடைய ஒளியின் அலைநீளங்களைப் பிரதி பலிக்கும்; ஒளிக்குழல் இவற்றை ஏற்றுத் தன்னுடைய, துணைக்குழலுக்கு அடையாளங்களாக அனுப்பும். தைரேட் ரான் என்ற குழல்தான் சாதாரணமாக ஒளிக்குழலுடன் சேர்ந்து செயற்படுகின்றது. இவற்றைத் துப்பறிவோரும் ஊர்க்காவலரும்கூட வெல்லமுடியாது; அவ்வளவு மிக நுட்பமாக இக்குழல்கள் பணிபுரிகின்றன. இன்று அணு வாற்றலால் உற்பத்தியான கதிரியக்க ஓரிடத்தான்கள் இத்தகைய பணிகளைச் செய்கின்றன.