பக்கம்:அந்தமான் கைதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



கிழக் கைதி: என்ன! என்பாட்டு அவ்வளவு இனிமையாகவா இருக்கிறது?

வாலிபக் கைதி: ஆமாம். அதிலும் தன் தாய் நாட்டின் பெருமையைக் கேட்பதில் உள்ள இன்பத்திற்கு ஈடு சொல்லவும் கூடுமா?

கிழக் கைதி: தம்பி இப்படி உட்கார்; உன் இஷ்டப்படியே பாடுகிறேன்.

[வாலிபக் கைதி உட்காருகிறான். கிழக் கைதி பாட்டின் பிற்பகுதியைப் பாடுகிறான்]

சிற்பம் ஓவியம் கீதம் காவியமோடு-பல
சீர்மிகும் கலைமேவி-இணை
செப்பரிய எனது செல்வத் தமிழ்த் தாய்நாட்டைத்
தெரிசித்து மகிழ்வேனோ?(சிந்தை)

பொன்னும் நவமணியோ டின்னும் பல பொருள்கள்
பொலிவுறும் தமிழ் நாட்டை-எந்தன்
கண்ணுக் காணாமல் என் வாழ்நாளை வீணே
கழித்திங்கு மாள்வேனோ? (சிந்தை)

வாலிபக் கைதி: ஐயா! நிம்மதியற்ற இந்த சிறைவாழ்க்கையில் இத்தனை நாட்களுக்குப் பிறகு இன்றைக்குத்தான் என் உள்ளத்தில் இன்ப மலர் அரும்புகிறது. என் தாய்நாட்டு இயற்கை இன்பங்களுக்கிடையே இருப்பதைப் போன்ற இன்ப உணர்ச்சியையே உண்டாக்கிவிட்டது தங்கள் இன்னிசை.

கிழக் கைதி: இயற்கைதானே!பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே” என்ற மணியுரை அறிஞர்களின் அனுபவ உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/11&oldid=1024290" இலிருந்து மீள்விக்கப்பட்டது