பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ரஞ்...!”

“ஒண்ணுமில்லேங்க: சும்மாத்தான் வந்தேன்.”

"கொஞ்ச நாழி ஒயவெடுக்கணும் போலிருக்கு.”

"எனக்காகக் காத்திருந்தீங்களா?’’

"நேரம் கெட்ட இந்த நேரத்திலேயா உன்னை எதிர் பார்ப்பேன்?

ரஞ்சனியை வெட்கம் தழுவியது.

ரதி புன்னகை செய்கிறாள்!

"ரஞ்சித், ஒரு நிமிஷம் உட்காருங்க: ரதியைப் பற்றி-என்னோட அன்பான ரதியைப்பற்றிச் சொல்லிடுறேன். என்கூடவே ‘ஸ்பீட் வே' கம்பெனியிலே பணி செய்கிறாள் ரதி; ஸ்டெனோ டைப்பிஸ்ட். சொந்த நாடு பாலக்காடு; இங்கே எர்ணாகுளத்திலே பானர்ஜி சாலையிலே இருக்கக்கூடிய ஏலக்காய் வாரியத்துக்குச் சமீபமாய், கச்சேரிப்படிப் பக்கம் சொந்தக்காரங்க வீட்டிலே தங்கியிருக்காள்!-அலுத்துச் சலித்துப் போயிட்ட பாலைவனமான என் மனசிலே ஒரு குளிர்ச்சோலையை உண்டு பண்ணினதே ரதியோட மகத்தான-மாண்புமிக்க அன்புதான்!-ஆகவே தான். இந்த ரதியையே என் உயிர் வாழ்க்கைக்கு உயிர்த் துணையாக ஆக்கிக்கிடவேணும்னு முடிவு செஞ்சிருக்கேன்!. ஊர் உலகத்தைப்போல நானும் குடியும் குடித்தனமுமாய் ஆகிப்பிடவேணும் என்கிறது. ரஞ்சனியோட ரொம்ப நாளையக் கவலை; என்னை மணவறையிலே சந்திச்சாத்தான், ரஞ்சனிக்கு மெய்யாகவே ஒரு சாந்தி ஏற்படுமென்கிறதையும் நான் அறிவேனுங்க!”

இருமல் செருமியது.

'ஃபில்டர் வில்ஸ்’ ஓடி வந்தது.

81