பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54,


துயர நிலையளவும் அவனை ஆட்கொண்டது, அலைக் கழித்தது, ஆலைக் கியல்பானது இதயம், சுடு புலனானது நயன வட்டம்.


வான் கண் விழித்தது


அப்போது


“அத்தான்,’ என்று அழைத்த வண்ணம் பலகாரத் தட்டையும் காப்பி டபராவையும் ஸ்டுலில் வைத்தாள் மாமல்லனின் உயிர்ப் பத்தினி வந்து நின்ற சில கணப் பொழுதுக்குள் அவளது கண் பார்வையில் சுழலச் செய்த உயிர்த் துணையின் உணர்ச்சி வசப்பட்டிருந்த உருவத்தை மறுமுறை நோக்கினாள். அமைதி கனிந்திருந்தது, ஆறு தலுடன் கூப்பிட்டாள் அவள்.


தோன்றிய விழி நீரை தோன்றாமல் செய்துகொண்டு மாமல்லன் தலையை உயர்த்தினான். மேகலையை அன்பு கனியப் பார்த்த தருணத்திலே, அவள் தரப்பிலும் அன்பின் களிநடனம் தெரிந்தது களிப்புக் கொண் டான் அவன்.


‘மேகலை, ஏன் நின்னுகிட்டேயிருக்கே?. உட்காரேன்.”


சொன்ன சொல் போதாதா? அரும்பு விரல் பற்றினான். திமிறினாள், காஞ்சிப் பட்டின் முகத்தலைப்பைப் பிடித்து இழுத்தான். நாணிக்கண் புதைத்த சமயம், அவனும் வெட்கப்படும்படி மேகலையின் நிலை அமைந்தது. அவள் புடவையைச் சரிப்படுத்தினாள்.


“பலகாரம் காப்பி சாப்பிட்டுப் புறப்படுங்க. இல்லை யென்றால், அத்தையிடம் சொல்லி விடுவேன், அதற்கும் பணியவில்லையானால், உங்க தங்கை சிந்தாமணியைச் சிபாரிசுக்குக் கூப்பிட வேண்டி வரும்.’


வேண்டாம், அப்படியெல்லாம் செய்யாதே. இது வெறும் பிணக்கு என்கின்ற குறிப்பை இமைச் சிறகுகளின்