உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் தோன்றிய அவதார புருடர்களும், அருட்கவிஞர் களும் தீர்க்கதரிசிகளும் கண்ட கனவை நினைவாக்குவது, இவ்வுலகை இறைமயமாகவும், இறையை இதுவுலகாகவும்: காணச்செய்வது. இவ்வுலக இயக்கங்களெல்லாம் மகத்தான் ஒரு காரிய சித்திக்காக இறைவன் திருவுளப்படி, இயற்கை பன்னையின் பேராற்றலினல் ஒழுங்காக இயங்குகின்றது என்பதை உணர்ச் செய்வது. a .

வாழ்வை வெறுத்துத் துறந்து அழித்து புலனையும். மனத்தையும் வென்றடக்க மோன சமாதியில் ஆழ்ந்து, பேருணர்வில் ஒன்றி இரண்டறக் கலந்து வாழ்க்கைக்கு அப்பாற் சென்று ஆத்மானந்தத்தில் திளைப்பதற்குப் பதிலாக இவ்வுலகில் சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்து கொண்டே அமரராய் ஆத்மபோதராய், எதற்கு மஞ்சா தீரராய்

வாழச் செய்வது.

வாழ்க்கை இன்பத்தில் தோன்றி, இன்பத்திலுய்த்து. இன்பமயமான இறைவனையுனர்ந்து, அவன் அருட்பணி. புரிந்து இன்புறுவதற்காக தோன்றியதே என்னும் உபநிடத மந்திரங்களின் உண்மையை நமக்கு தெளிவாக விளக்குவது அதிமானச சக்தியேயாகும். நர மனிதனே தேவ. மனிதனாகவும், நரை திரை மூப்பு, சாக்காட்டால் பாதிக் கப்படும் இவ்வுடல், எதலுைம் பாதிக்கப்படாததும், அழிவற்றதுமான அமர நிலையை அடையச் செய்வது, மரணமிலாப் பெருவாழ்வு என்று மறை புகலும் அருள்.

மொழியை செயலில் காட்டுவது.

அறிவு ஆற்றல் அமைதி ஆனந்தம் முதலிய தெய்வீக குணங்களை இயல்பாகவே தன்னிடத்தேயுடைய அதிமானச : சக்தியின் இறக்கத்தால்தான் ஓர் மனிதன் தேவமனிதனுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/35&oldid=1544643" இலிருந்து மீள்விக்கப்பட்டது