பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அன்னி பெசண்ட் அம்மையாரின்


மக்களிடையே இந்த பாசமும்-நேசமும் அப்போது வளர்ந்து கொண்டிருக்கும் நேரம் அது! அதனால் பிராட்லா எதிர்ப்பு, அவரது நண்பர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருத்தது. அன்னிக்கும் அதே நோக்கமே!


மார்க்ஸ் எப்படி வேதனைகளை ஏற்றுக்கொண்டு தனது கொள்கைளைப் பரப்பி வந்தாரோ: ஆதே போலவே, லண்டன் வாழ் மார்க்சீயர்களும், பணம் என்ற ஆசையில்லாமல், பட்டினியோடும்-பசியோடும் அந்தத் தத்துவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள்.


இந்த இலட்சிய வெறி, பக்தி தொண்டு, உழைப்பு, தீவிரம் இவை அன்னியின் மனதிலே ஆழப்பதிந்து அவர்கள் மீது ஒரு மதிப்பும், மரியாதையும். அன்பும் உருவானது. அதனாலும், அன்னி பிராட்லாலை விட்டுப் பிரிந்தார் எனலாம்;


மார்க்சியர்களது பேச்சுக்களை அன்னி தொடர்ந்து கேட்டனர்; அந்த தத்துவங்களைப் படித்தார்! அதனால் அவருக்குப் பிராட்லா எதிர்ப்புமீது பற்றறுந்தது!


உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா அப்போது ஒரு பொதுவுடைமை வாதியாக இருந்தார். அன்னிக்கும் அந்த நகைச்சுவை எழுத்தாளர் மீது ஒரு தனி மரியாதை உண்டு அவரது தொடர்பு அன்னிக்கு வாய்த்தது.


பெர்னாட்ஷா, அல்லும்-பகலும் பொதுவுடைமைக், கொள்கைக்கும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது உழைத்து வருவதை, அன்னி கேட்டும்-பார்த்தும் மகிழ்ந்தார்!


பெர்னாட்ஷா தொடர்பு அன்னிக்கு ஏற்பட்டது முதல், தொழிலாளர் நலனுக்காக அன்னி பேச ஆரம்பித்