பக்கம்:அன்னை தெரேசா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 களுக்கான மறுவாழ்வு மையம் ஒன்றையும் உருவாக்கி வருகிருேம்; புத்துயிரும் புதுவாழ்வும் அருளப்பெற்ற நோயாளிகள் இங்கே தங்களுடைய எதிர்கால வயிற்றுப் பிழைப்புக்கு உகந்த பயிற்சிகளைப் பெற வசதி வாய்ப்புக் கள் உண்டு; இப்பயிற்சிகளின் மூலம் அவர்கள் தங்கள் விருப்பப்படி பிழைப்பை நடத்த முடியுமே!- சொந்த ஊர் களில் சிறு தொழில்களை மேற்கொள்ளலாம்; இஷ்டப்படி வேறு அலுவல்களும் பார்க்கலாம். ஆனல், இவர்களெல் லாம் தங்கள் பேரில் யாருமே அன்பு காட்டுவதில்லை என்ற விரக்தியில் முன்போல இனி பிச்சை எடுக்கத் தேவை இல்லை; அப்படிப்பட்ட தேவை வரவும் வராது; வரவும் வேண்டாம்! அவர்கள் பால் அன்பு பாராட்ட நல்ல உள்ளங்கள் இந்த நல்ல உலகிலே என்றென்றும் வாழை யடி வாழையாகப் பிறந்து கொண்டிருப்பார்கள்!' நாடு, மொழி, சாதி, சமயம் முதலான குறுகலான பாகுபாடுகளைக் கடந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினுடியும், கடையரினும் கடையருக்குத் தொண்டும் ஊழியமும் செய்து வரும் அறநெறி சார்ந்த அன்புப்ப்னி அமைப்பின் சார்பில் 1957- ம் ஆண்டில் கல்கத்தாபுற நகரில் கோட்ரா என்னும் இடத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழுநோயாளிகள் இல்லம் வளரவும் வாழவும் தொடங் இயது. உங்களது மேலான அன்பால் தொழுநோயர் க%ரத் திண்டுங்கள்!' என்கிற மனிதத் தன்மையைச் கண்டியிழுக்க வல்ல பொதுவானதொரு வேண்டுகோள் விண்ணப்பத்தோடு தொழுநோயாளிகள் நிதிவசூல் நாள்: ஒன்றும் நடை முறைப்படுத்தப்பட்டது. நிதி மிகுந்தவர்கள் அள்ளிக்கொடுத்தார்கள்; நிதி குறைந்தவர்கள் அள்ளாமல், கொடுத்தார்கள். - தொழு நோயைப் பற்றியவர்களை அன்பினால் பற்றி ஆதரவளித்து வந்த பொது நலப் பண்பாளர்களின் தரும சித்தங்கள் தெரேசா அன்னையின் இதயத்தைப் பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/108&oldid=736242" இலிருந்து மீள்விக்கப்பட்டது