பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65

களது ஆதரவுகள் பொங்கி வழிந்ததை, சில தீவிரவாதிகள் எனப்பட்டோர் எல்லாம் பின்னடைத்து வீரக்தியாளர் ஆனார்க்ள்.

இந்த நிலையிலும், அன்னி பெசண்டு சும்மாயிருக்கவில்லை. கல்வித்துறைக் குறைபாடுகளை உலகுக்கு உணர்த்த ஒரு மாதப் பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார்.

ஒரு நாடும் இழந்த தனது நாகரீகம், பண்பாடு சுதந்தரம் இவைகளின் மீண்டும் சீரடைய வேண்டுமானால், அந்த நாட்டு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக, கற்றவர்களாக இருக்க வேண்டும்.

அப்போதுதான், அவர்களது பண்டைக் காலச் சிறப்புக்களைப் பாதுகாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறை மக்களது மேம்பாட்டுக்கு ஒவ்வாத முறை, அறிவு வளர்ச்சி பெறுவதற்காகவே கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்போதுள்ள கல்வி முறை அரசு பணிகளுக்காக மட்டுமே கற்கும் முறையாக உள்ளது என்று மனம் நொந்து கல்விக் கூடக் கூட்டங்களில் பேசினார்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களது தாய் மொழியில் தான் கல்வி கற்றாக வேண்டும். அப்போதுதான், அவர்களது வரலாறு என்ன? நாகரீகம் என்ன? பண்பாடுகள் என்ன? என்பதையெல்லாம் பிறர் தயவு இல்லாமலே பெறமுடியும். இதற்குகந்த கல்விமுறைதான் இப்போதைய தேவை என்பதை வற்புறுத்தினார்.

அ-5