பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


மலா் வெளியானது. கல்கத்தா நகர விழா மண்டபத்தில் கண்கொள்ளாக் காட்சியாகக் கூடிய மக்கள் கூட்டத்தில் தாகூரிடம் அந்த மலர் வழங்கப்பட்டது.

ஆனால், லண்டன் வட்ட மேசை மாநாட்டிலே இருந்து காந்தியடிகள் இந்தியா திரும்பிவந்தபோது, 1931 ஜனவரி 6-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார் பிரிட்டிஷ் ஆட்சியினரால், என்ற செய்தி காதுக்கு எட்டியவுடனே மகிழ்ச்சியின் கோலாகல ஆரவாரங்களிலே மூழ்கிக் கிடந்த தாகூர் பெருமகன் இந்தியா முழுவதிலும், எங்கும் எனது பிறந்த நாள் விழாவை நடத்தக் கூடாது என்று அறிக்கை விடுத்து, தனது பிறந்த நாள் விழாவைத் துயர நாளாக மாற்றி விட்டார்.

அத்தோடு நின்ற வரல்லர் தாகூர்! காந்தியடிகள் எரவாடா சிறையிலே உண்ணா நோன்பு கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, தாகூர் பெருமகன் பூனா நகரிலே உள்ள அந்தச் சிறைக்குச் சென்று, உண்ணா நோன்பு முடியும் வரையில் காந்தியடிகளுடனே இருந்தார் என்றால், இந்த நட்பு நேயம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? எண்ணிப் பாருங்கள்!

காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இவ்வாறு இரு பெரும் பண்பாளர்களாக, அன்பாளர்களாக, நடந்து இந்திய நாட்டின் கலங்கரை விளக்கங்களாக இந்திய நாட்டிறகு மட்டுமன்று, மனித நேய உலகுக்கே வழிகாட்டிய மாண்டாளர்களாக இருந்தார்கள்.

கவிஞர் தாகூர் எல்லாரிடமும் அன்பு காட்டிய மாமேதை அவர் உளப்பூர்வமாக வெறுத்தது ஏதாவது ஒன்று உண்டு