பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

 ரிக்ஷாக்காரன், சிவஞானத்தையே பார்த்தவாறு இன்னமும் நீன்றிருந்தான்.

குழந்தையின் முகத்தோடு தன்னுடைய முகத்தைப் பொருத்திய வண்ணம் கின்றுகொண்டிருந்த சிவஞானம், எதையோ மறந்துவிட்டு, பிறகு நினைத்துக்கொண்டவன் போன்று தடுமாறியவனாக, "உனக்கு எவ்வளவு பணம் தர வேனும்?" "எழுபத்தஞ்சு காசுதானே ?” என்று கேட்டான். ரிக்ஷாக்காரன்பேரில் இப்போது அவன் கவனம் ஒட்டியிருந்தது. சிவகங்கைப் பூங்காவில் மெல்லிசை கேட்டது.

ஒட்டிக்கிடந்த கன்னங்கள் சற்றே விரிசல் கண்டு நெளியச் சிரித்தபடி, "கூலியைத்தான் ஸ்டேஷன் வாசலிலேயே தந்திட்டீங்களே, ஸார்"என்று பதில் அளித்தான் ரிக்ஷாக் காரன். அச்சிரிப்பில் நயமில்லாவிட்டாலும் நாணயம் இருந்தது.

சிவஞானத்துக்கு, தான் கூலி கொடுத்தது அப்பொழுது நினைவு வந்துவிட்டது. சமன் நிலை கணித்து, தோல் பெட்டியைத் தரையில் வைக்கப் போனவன், அதைப் பழையபடி தன் கைப்பிடிப்பிலேயே நிறுத்திக்கொண்டான். "வாஸ்தவந்தானப்பா!” என்றான். 'சொல்லுக்குச் சொல், 'அப்பா-அப்பா!' என்று பேசினால் பட்டணக்கரையில் ஒரு அலாதி மரியாதை!...

இங்கெல்லாம் எப்படியோ ?'

மாளிகையிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு புதியஜோடி வெளியேறிக்கொண்டிருந்தது. "தி.மு.க மகத்தான வெற்றிபெற ஒத்துழைத்த வாக்காளப் பெருமக்களுக்கு எங்களது நன்றி!" என்று அறிவித்த சுவரொட்டி, இன்னமும் புதுக்கருக்குடன் திகழ்ந்த விந்தையை ரசித்தபடியே அந்த இணை நகர்ந்தது.

'சிவனே' என்று நின்றுகொண்டிருந்தது அழகு மாளிகை யாவரும் அதை 'உட்காரச்' சொல்லாத வரை அதன்பாடு யோகந்தான்!.....

அம்மாளிகையின் விசேஷம் என்ன, தெரியுமா?

அது ஒரு விடுதி. அதாவது, பிரயாணிகள் தங்கும் இல்லம் அது. அறைகள் பல கீழ்த்தளத்திலும் மேல்

தளத்திலுமாக இருந்தன. இஷ்டப்பட்ட அறைகளே அவரவர்கள் பிடித்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், ஒரு விசேஷம்