பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

நில இதயத்தில் அது விழும்போது பூப் போல மேன்மையாகிறது.

அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை! நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்! அது ஊறிய மண்ணில் எத்தனை குளுமை: ஏழையின் கண்ணிலிருக்கின்ற இரக்கத்தையும் தமிழ் மொழியிலிருக்கின்ற சரத்தையும் நீர்வீழ்ச்சி வென்று விடுகிறது:

பள்ளத்தாக்கில் அது விழுந்தாலும் கடலுக்குக் குழந்தையாகிவிடுகிறது.

கயவர்களும் அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர்-ஆளுல், வென்றதில்லை.

மன ஊருக்குப் பக்கத்தில் அது நீண்ட காலமாக விழுந்து கொண்டிருக்கிறது.

அது வற்றிவிடாதோ என்று கோடைகால நெஞ்சங்கள் எதிர்பார்த்தன.

அதுவா வற்றும்? எப்போது வானம் கண்ணைத் திறந்ததோ-அப்போதே அது மண்ணைத் தொட்டது.

தீர்த்தமென்று அதைத் தெய்வீகன் கூறுகிருன். திருத்தும் என்று பகுத்தறிவாதி கூறுகிருன். அறிவு மலையிலிருந்து விழுவது நீர்வீழ்ச்சி! அதனுடைய இரைச்சல் எல்லா தேசத்தையும் செவி மடுக்கச் செய்தது.

வெட்கப்பட்ட நாடு வணங்கிக் கேட்டது. ரோஷமற்றவன் காலைக் கழுவினன். அதோ அது அவன் காலிலே நெருப்பாக இல்லை. நிலவாக குளிர்கிறது!

教 క్ష #: భః:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/23&oldid=564467" இலிருந்து மீள்விக்கப்பட்டது