உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

19

ஏற முடிந்தது. வண்டியின் முன்புறத்தில் இடது பக்கமாக உட்கார்ந்து கொண்டான் அவன். அவனது கால்களில் ஒன்று வண்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

2

வண்டியை இழுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக நடந்தது அந்த நல்ல குதிரை. பனி உறைந்து மென்மையாக விளங்கிய பாதை வழியாக ஊரைக் கடந்து சென்றது. வண்டியின் பின்பக்கத்துச் சறுக்கிகள் வேகம் காரணமாகக் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.

‘அவன் அங்கே தொங்குவதைப் பாரேன். சவுக்கை என்னிடம் கொடு, நிகிட்டா’ என்று கத்தினான் வாஸிலி ஆன்ட்ரீவிச்.

அவனுடைய ‘வாரிசு’ சறுக்கிகளின் மேல் நின்று வண்டியின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சி அப்பனுக்குப் பெரு மகிழ்ச்சியே தந்தது. என்றாலும், ‘உனக்கு உதை கொடுப்பேன். அம்மாவிடம் ஓடிப்போ, நாயே!’ என்று அதட்டினான் வாஸிலி.

பையன் கீழே குதித்து விட்டான். குதிரையும் தனது மந்த கதியைத் துரிதப்படுத்தியது. சட்டென்று அடிமாற்றி, வேக ஓட்டத்தில் முனைந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வசித்த கிராமத்தில் ஆறு வீடுகள் தான் இருந்தன. ‘தி கிராஸஸ்’ என்பது அதன் பெயர். அவ்வூரின் கடைசி வீடான கருமான் குடிசையைத் தாண்டியதுமே, தாங்கள் கருதியதைவிட மிகவும் கடுமையாக இருந்தது காற்று என்பதை