உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருட்டு ராஜா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்39


திடீரென்று முத்துமாலை பழங்கால நினைவோட்டத்தில் ஆழ்ந்தவனாகப் பேசினான். நீ எப்பவாவது எண்ணிப் பார்ப்பதுண்டா ராசு? ஒவ்வொருத்தன் வாழ்க்கை எப்படி எப்படியோ போயிடுது. சின்னவயசிலே பள்ளிக்கூடத்திலே நம்ம கூட ஒண்ணாச் சேர்ந்திருந்தவங்களைப் பத்தி நான் எப்பவாவது நினைக்கிறது உண்டு. பொன்னம்பலம் என்ன ஆகியிருப்பான் முத்தய்யா இப்போ எப்படி இருக்கானோ? சாமிக்கண்ணு எப்படி இருப்பான். அப்படீன்னெல்லாம் யோசனை போகும். பல வருசங்கள் ஒண்ணாக் கூடிப் பழகினோம். பிறகு பிரிஞ்சிட்டோம். ஒவ்வொருவர் வாழ்க்கை வெவ்வேறு திசையிலே போயிடுது. சின்ன வயசிலே பெரிசாக் கனவு கண்டவங்க, ஆசைப்பட்டவங்க, வாழ்க்கையின் நிஜத்தை அனுபவிக்கையிலே ரொம்பவும் மாறிப்போறாங்க. அபூர்வமா ஒருத்தன் ரெண்டுபேரை நாம அப்புறம் என்னைக்காவது பார்க்க முடியுது...ரொம்ப ஏமாற்ற மாயிடுது; இல்லைன்னா எதிர் பார்த்திராத ஒரு பெரும் திருப்பமா இருந்திருது!

“நடராசன்னு ஒருத்தன். ஒன்பதாம் வகுப்பு வரை ஒண்ணாப் படிச்சோம். அப்புறம் நான் படிக்கலே. அவன் ஹைஸ்கூல் படிப்பை முடிச்சான். ஒவ்வொரு வகுப்பிலும் அவன்தான் முதலாவதா இருப்பான். தமிழ், இங்கிலீஷ், கணக்கு—எல்லாத்திலியும் ஃபஸ்ட் மார்க் வாங்குவான். அவன் காலேஜ் படிப்பு படிச்சு நல்லா முன்னுக்கு வருவான்னு வாத்தியாரெல்லாம் சொன்னாங்க.”

“ஆனா, நடந்தது என்ன தெரியுமா தங்கராசு? பல வருஷத்துக்குப் பிறகு அந்த நடராசனை நான் சந்திக்க நேர்ந்தது. எங்கே தெரியுமா? சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்லே, சாதாரண குமாஸ்தாவாக. பாரு! பெரிய புத்திசாலிப் பையன். நல்ல அறிவாளி. வெறுமனே ஈயடிச்சான் காப்பி வேலை பண்ற உத்தியோகம்னு கிண்டலாச் சொல்லு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/41&oldid=1138996" இலிருந்து மீள்விக்கப்பட்டது