உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருட்டு ராஜா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24இருட்டு ராஜா


ரொம்ப நேரம் ஆன பிறகு, முத்துமாலையின் சத்தம் மறுபடியும் நெருங்கிவந்த போது, தங்கராசு எழுந்து திண்ணையில் காத்திருந்து, அவன் கவனத்தைக் கவர்ந்தான். பேசினான். பதிலும் பெற்றான்.

ஆனாலும், அவனுடைய ஆச்சரியம் எங்கே குறைந்தது?

3

தங்கராசுவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவன் அம்மா மறுநாள் காலையில். முத்துமாலையோடு தான் பேசியதைப் பற்றி அவனே அவளிடம் சொன்ன போது தான்,

“ஆங், அப்படியா? அவன் சீறி விழலியா? முறைக்கலியா?” என்று கேட்டாள்.

“அவன் என்ன வெறி மிருகமா சீறிப் பாயறதுக்கு? இல்லே நல்ல பாம்பா? அவனும் நம்ம மாதிரி மனுசன் தானே? என் கூடப் படிச்சவன் தானே ஒரு காலத்திலே!” என்று தங்கராசு சொன்னான்.

“இருந்தாலும், ராசு, எல்லா மனுசங்களும் ஒண்ணு போலவா இருக்கிறாங்க? நாய்க்குணம், நரிக் குணம், பேய்க் குணம் பெற்றவங்களும் இருக்கதானே செய்யறாங்க?”

“துஷடமிருகங்க கூட அதது பாட்டுக்கு, தான் உண்டு தன் காரியம் உண்டுன்னு தான் போகும் அம்மா. நாம அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/26&oldid=1143519" இலிருந்து மீள்விக்கப்பட்டது